Thursday, March 09, 2006

டென்ஷன் டென்ஷன் டென்ஷன்


இன்று காலையில் வழக்கம் போல பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். நூறடி ரோடு அம்மன் கோவில் அருகே ஒரு வற்றாத ஜீவ குட்டை உண்டு.என் கெட்ட நேரம் ஏதோ சிந்தனையோடு ரோடு தாண்ட அங்கே நிற்க கடன் கேட்டவன் துரத்துவது மாதிரி வெறி பிடித்த வேங்கையாக தேங்கிய தண்ணீரை தெறிக்க விட்டு பறந்தான் ஒரு பஸ் ட்ரைவர்.உடனே முகுளமோ தண்டுவடமோ செயல்பட சட்டென்று திரும்பி நின்றேன். நல்ல வேளையாக முதுகு வரை சேறு எகிறவில்லை, கெட்ட வேளையாக முழங்காலுக்கு கீழே பேண்ட் நாஸ்தி.எனக்கு ‘சுர்’ரென்று கோபம் ஏறியது.எவ்வளவு அழகான காலைப் பொழுது, இப்படி டென்ஷன் ஏற்றி விட்டானே, சரி அவனுக்கு என்ன டென்ஷனோ வீட்டில் மனைவி திட்டோ, வேலை பிடிக்கவில்லையோ அப்படியானால் ஒரு வேளை அவனுடைய டென்ஷனை நான் வாங்கிக் கொண்டேனோ ஆமாம் ஒரு வகையில் உண்மை தானே ஆஹா காலையில் நிதானமாக இருந்தால் எவ்வளவு தத்துவங்கள் கொட்டுகின்றன? ஆகவே எதற்காக மற்றவர்களின் டென்ஷன்களை நாம் வாங்கி கஷ்டப்பட வேண்டும் அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும், நம்முடைய டென்ஷனை மட்டும் நாம் வைத்துக்கொள்வோம்.

1 comment:

Chandravathanaa said...

எத்தனையோ ஆண்கள் வேலையிடத்து ரென்சனை மாலையில் மனைவி மேல் கொட்டுகிறார்கள்.
நீங்கள் எப்படியோ...?
அந்தப் படத்தை எங்கே தேடிப் பிடித்தீர்கள்?