Thursday, March 30, 2006

ஜெயலலிதா இப்படியும் அறிக்கை விடலாம்

கருணாநிதி குங்குமம் சர்குலேஷன் அதிகப் படுத்து போல நினைத்து 2 ரூபாய்க்கு அரிசி, கலர் டிவி என அள்ளி விட்டிருக்கிறார்.இதை சமாளிக்க ஜெயலலிதா இப்படியும் அறிக்கை விடலாம்

1.ஏழைகள் எல்லோரும் நடுத்தர வர்க்கத்திற்கு ‘அப்கிரேட்’ செய்யப்படுவார்கள். 2.வாழ்க்கையின் இன்றியாமையாத்தேவைகளான செல்போன், ஐபாட், ஷூ, கூலிங் கிளாஸ் மற்றும் பல இலவசம்
3.கோடை வெயிலை சமாளிக்க ஸ்விட்ஸர்லாந்துக்கு இலவச சுற்றுப்பயணம்
4.சென்னை முழுக்க சென்ட்ரலைஸ்டு ஏசி
5.கருணாநிதி பாசக்கிளிகள் மாதிரி படங்களில் பங்களிப்பதை தடுக்க கைது செய்யப்படுவார்
6. திருமணமாகாமல் தவிக்கும் ‘ஆண்’களுக்கும் திருமண உதவித் தொகை
7.மாணவர்களுக்கு தினமும் கோழி பிரியாணி
8. நிலமற்ற ஏழைகளுக்கு 10 ஏக்கர் நிலம் ( நிலம் தீர்ந்து போனால் கடலை வற்ற வைத்து அந்த இடம் கொடுக்கப்படும்)
9.பாஸ்போர்ட் அப்ளை செய்த அனைவருக்கும் அமெரிக்க ஹெச் 1 விசா (அல்லது அவர்கள் விரும்பும் நாட்டிற்கு)
10.எல்லா பண்டிகைகளுக்கும் அதை கொண்டாட தேவையான பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்படும் (உதாரணம் தீபாவளிக்கு பட்டாசு, புத்தாடை பொங்கலுக்கு சட்டி, விறகு, சர்க்கரைப் பொங்கல்)

3 comments:

Thats Secret said...

கமெண்ட்களை காட்டாததற்கு காரணம் நான் அல்லன் அது ப்ளாக்ஸ்பாட் டெக்னிகல் ப்ராப்ளம் இப்போது சரியாகி விட்டது இனி நீங்கள் விரும்பியதை கொட்டலாம் திட்டலாம்

தயா said...

பார்வை, உள்ளதை சொன்னால் துக்ளக் நமது எம்.ஜி.ஆரா?

எல்லாம் பார்வையில் தான் இருக்கிறது.

கோகுல், நீங்கள் மென்பொருளாளர் என்பதை உணர்த்தும் விதமாக ஐபாட் எல்லாம் கேட்டிருக்கிறீர்கள்.

வேலையுமில்லாமல் மணமுமாகமல் இருக்கும் ஆண்களுக்கு உதவித்தொகை அவசியம் தான்.

குங்குமம் கணக்காக என்றீர்கள் பாருங்கள் சிரிப்பு தாங்க முடியவில்லை.

பின்னால் இலவசத்துக்கு ஆசைப்பட்டு தன்மானம் இழந்தான் தமிழன் என்ற அறிக்கை வரும். திமுக வென்றாலும் அதிமுக வென்றாலும் இந்த அறிக்கை தமிழனின் தன்மானத்திற்கு உரைகல் தான்!

தயா said...

குங்குமம் கணக்காக என்றதும் சிரிப்பு தாங்க முடியவில்லை.

தன்மான தமிழன் வண்ண தொலைகாட்சிகனவில் தன்னை தொலைத்து விடுவானோ என கவலையாக இருக்கிறது.