Wednesday, March 01, 2006

பழமொழிகளை அனுபவிக்கணும்

சிறு வயதில் பட்டி மன்றங்கள் அதிகம் பார்ப்பேன், அதில் பெரும்பாலும் தமிழ் பற்றி அவர்கள் சொல்லும் உவமைகள் என்னை வியப்பில் ஆழ்த்தும்.அதே போல் பழமொழிகளுக்கு புது விளக்கம் அளிப்பார்கள். உதாரணத்திற்கு “பந்திக்கு முந்து படைக்கு பிந்து” என்பதற்கு கேள்விப்பட்ட புது விளக்கம் நம் கை சாப்பிடும்போது முன்னால் வரும் அது தான் பந்திக்கு முந்து, அதே போல் போரில் ஈட்டியை எறியும்போது கை பின்னால் போகும் இது தான் படைக்குப் பிந்து என்பது அதாவது கை பின்னால் போகிறது என்பது என்று கேள்விப்பட்டேன். இதே மாதிரி “சட்டியில் இருந்தா ஆப்பைக்கு வரும்” சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்தால் அகப்பை (கருப்பை) யில் கரு வரும் என்பதே உண்மையான பொருள் என்று சொன்னார்கள்.இதெல்லாம் தான் உண்மையா இல்லை சில பலரின் கிரியேட்டிவிடியா ஒன்றும் புரியவில்லை.கமல் ஒரு படத்தில் சொன்னது போல் பழமொழிகளை அனுபவிக்கணும் ஆராயக்கூடாது.

4 comments:

Unknown said...

நான் கேட்டது:

ஆயிரம் "பேருக்கு போய்" ஒரு கல்யாணம் பண்ணனும் என்பது தான் ஆயிரம் "பொய்" சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்று மருவி இப்பொது சொல்லப்படுகிறது (வசதிக்கேற்றபடி மாத்திக்கிட்டாங்க யாரோ!).

siddhan said...

Gokul,
Really the true meaning of proverbs are changed by people for their convenience.

For e.g,
"pokathavannukku police vaelai,vakkathavanukku vakkeel vaelai"

The true meaning is,
pokku that means olukkam karravanukku police vaelai.
Like that vaaku that means paechhartral ullavanuuku vakkeel vaelai.

This is an example. Like that so many proverbs are there.

TamilSiddhan

siddhan said...

Gokul,
Really good. Likethat so many proverbs are there for which people have different meaning from the original.

Tamilsiddhan

siddhan said...

Gokul,It is really good.