Monday, March 20, 2006

ஐபாட் வாங்கலியோ ஐபாட்

சமீபத்தில் பத்திரிக்கைகளில் அல்லது உங்கள் நண்பர்கள் யாரும் டிஎஸ்சி (என்னை வம்பில் மாட்டி விட்டுடாதீங்க?!@) கம்பெனியில் இருந்திருந்தால் அங்கே ஒரு வருடம் வேலை செய்தவர்களுக்கு ஐ பாட் எனும் மல்டிமீடியா கருவி இலவசமாக தரப்பட்டிருப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அப்படி எங்கள் ரூமிற்கும் ஒரு ஐபாட் வந்தது. ஏதோ வேற்று கிரகத்திலிருந்து கிடைத்த பொருள் போல பார்த்தோம்.இப்போது தான் அது பற்றி நெட்டில் தேடி நண்பனுக்கும் எனக்கும் புரிய வைத்துக் கொண்டேன்.அவன் நேற்று கேட்டான், “உனக்கு வேணுமா இதே மாதிரி என் கொலீக்குக்கு கொடுத்த ஐபாட்? பதினாலாயிரம் தான்” அதன் விலை 24000 என்று அறிந்தேன் “ஆமா அத அவனுக்கு பிடிக்கல அவன்ட்ட இது வேணுமான்னு கம்பெனி டிஸ்கஸ் பண்ணவுமில்ல நிறைய பேர் விக்கலாம்னு இருக்காங்க” என்றான். நியாயந்தான், நமக்கு பாட்டு கேக்க எஃப் எம் போதுமப்பா பனிரெண்டாயிரம் செலவு பண்ணனுமா, ஐபாட் வேண்டும் என்பவர்கள் தங்கள் நண்பர் வட்டத்தில் விசாரிக்கவும்.

2 comments:

SP.VR. SUBBIAH said...

ஆமா சாமி - அதெல்லாம் காசுக்குப்பிடிச்ச கேடு சாமி!
நமக்கு எ·ப் எம் ரேடியோவும், சன் மீயூஸிக்கும் இருக்கு சாமி !

மகேஸ் said...

இப்போது மொபைல்,FM ரேடியோ,கேமரா,மெமரி கார்டுகள்(upto 10GB, i can't believe it. but's in the market) அனைத்தும் கூடிய சாதனங்கள் வர ஆரம்பித்து விட்டன. இதனால் பல பொருட்களை தூக்கிக் கொண்டு அலையத் தேவையில்லை.