Friday, March 17, 2006

உலகத்திற்கு ஈடு கொடுத்து ஓட வேண்டும்

சுமார் ஒரு மாத காலமாக நினைத்துக்கொண்டு (மட்டும்) இருந்த யோசனை (ஐடியா) ப்ளாக்கர்
வலைப்பூக்களுக்கு வகைப்படுத்துதல் (கேட்டகரைஸ் ) தரப்பட வேண்டும் என்பது.அதாவது நாம் எழுதும் பதிவுகளை நம் வலைப்பூவுக்குள்ளேயே அறிவியல் , கவிதை என வகைப்படுத்தும் வசதி, இதை ஒன்று ப்ளாக்கருக்கு ஒரு கடிதம் ,பலிக்கவில்லையென்றால் பல ஸ்கிரிப்ட்களை கலந்து புது ஸ்க்ரிப்ட் , இல்லையென்றால் நண்பர்களுடன் சேர்ந்து எப்படியாவது நாமே பண்ண வேண்டும் என எண்ணியிருந்தேன். நேற்று பார்த்தேன் இவ்வசதி தர ஒரு தளம் முளைத்து விட்டது.(ஆனால் இப்போது உறுப்பினராக இயலாது என்று சொல்லி விட்டார்கள்).யாரும் என்னடா இது இனிய தளத்தில் சொல்ல வேண்டியதை இங்கே சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம் (உறுப்பினராகும் வசதி வரும்போது அங்கேயும் சொல்வேன் ) பாருங்களேன் அந்தக்காலம் போல் இல்லை நாம் நினைக்கும்போதே யாரோ செயல்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள் (அந்த தளம் பீட்டாவில் இருக்கிறது).அப்போதெல்லாம் அடுப்பில் காயும்போது தட்டு தூக்கியெறிந்ததைப் பார்த்து விட்டு நீராவி ரயில் எஞ்சினை ஒரு விஞ்ஞானி (ஸாரி பெயர் மறந்து விட்டது) கண்டுபிடித்ததாக அறிவியல் புத்தகத்தில் படித்திருக்கிறேன், அதாவது அவர் கண்டுபிடிக்க முயன்ற இடைவெளியில் யாருக்குமே அது தோன்றவில்லை. அவசரப்பட வேண்டாம் என்னை அந்த ரேஞ்சுக்கு ஒப்பிடவில்லை பொதுவாக சொல்கிறேன் .

நேற்று ரயிலில் பேச்சு முசுவில் கிண்டி வந்தது தெரியாமல் இறங்க இரு நிமிடங்கள் தான் தாமதித்து இருப்பேன். அடுத்து ஏற வந்தவர்கள் சர சரவென உள்ளே வர நடுவில் மாட்டி அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன், அதில் பாருங்கள் கிண்டியிலிருந்து வேளச்சேரிக்கு ஏகப்பட்ட பேருந்துகள், ஆனால் மவுண்ட்டிலிருந்து ஒன்று கூட கிடையாது. காலம் இதை விட வேகமானது அறிவை விட முயற்சியை தான் அது மதிக்கும்.

என் நண்பனின் அப்பா சொல்வார் (அவருடையதா என்றறியேன் ஆனால் சோம்பேறித்தனம் வந்தால் இதை தான் நினைப்பேன்)
“எப்போதும் வாழ்க்கைக்கு வாய்ப்பு தராதே, நீயாகவே வளைந்து விடு, கொஞ்சம் சோம்பேறித்தனப்பட்டு ஓய்வாக இருந்தால் அப்புறம் வாழ்க்கை வளைக்கும் எப்போதுமே வாழ்க்கை வளைத்தால் ரொம்ப வலிக்கும்”

3 comments:

ஏஜண்ட் NJ said...

//“எப்போதும் வாழ்க்கைக்கு வாய்ப்பு தராதே, நீயாகவே வளைந்து விடு, கொஞ்சம் சோம்பேறித்தனப்பட்டு ஓய்வாக இருந்தால் அப்புறம் வாழ்க்கை வளைக்கும் எப்போதுமே வாழ்க்கை வளைத்தால் ரொம்ப வலிக்கும்”//

அருமையான அறிவுரை.

"கடிகாரம் ஓடும் முன் நீ ஓடு" என்று நேரத்தின் அவசியத்தை முன்னிறுத்தி எனது நண்பர் ஒருவர் கூறுவார்.

Geetha Sambasivam said...

Neeravi Engine kandu pidithathu James Watt.

Boston Bala said...

The popup box is annoying. If the reader wishes to stay & read... he will; but these suave scripts are kind of so 80s....