Friday, March 17, 2006

அறிவியல் தமிழா / தமிழாக்கமா?

வலைப்பூக்கள் இந்தியாவிலும் பிரபலமாக ஆரம்பித்து விட்டன என்பது மகிழ்ச்சியான செய்தி அதுவும் தமிழில் பிரமிக்கும் வளர்ச்சி. என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் பெரும்பாலான பதிவர்கள் ஏதோ விதிக்கு (ரூல்) கட்டுப்பட்டது போல சுத்தத்தமிழில் எழுதுகிறார்கள்.எனக்கு
அவ்வளவு திறமை இல்லாவிட்டாலும் அவ்வப்போது முயற்சிப்பேன்.இது நல்லதே எனினும் சில பல நேரங்களில் எனக்கு நிறைய வார்த்தைகள் புரியாது அந்தப்பதிவின் ஓட்டத்தை வைத்தே
புரிந்து கொள்வேன் நல்ல உதாரணம் மறு மொழி மட்டுறுத்தல்.முதன் முதலாக இதை படித்த போது கமெண்ட் மாடரேஷனைத்தான் சொல்கிறார்கள் எனப் புரியவே இல்லை (ஆங்கில பெயர்ப்பை கவனிக்காதும் இருந்திருப்பேன்).படிக்கும்போதே இதை தான் சொல்கிறார்கள் என புரியும் வகையில் மொழி பெயர்ப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும், கருத்திடுகை அல்லது பதில்மொழியிடுகை என் கண்டுபிடிப்பு (ஆ அய்யோ அம்மா தமிழன்னை அடிக்கிறாள்).

அதே நேரம் அப்படியே ஆங்கிலம் - தமிழ் மாற்றவும் கூடாது. “யூத் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க நினைத்து இயக்குனர் ‘இளமை’ என்று வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆ... விஜய் ஜோடி யாரு ஷகீலாவா? என்று கேட்டிருப்பார்கள்” என்பார் என் நண்பர்.

1 comment:

Albert said...

கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல இதே போன்ற பிரச்சணையை நானும் சந்தித்தேன். அதாவது பெரும்பாலோர் தங்கள் பதிவுகளில்"மீயுரை" என்று குறிப்பிட்டுருந்தார்கள். பின்னர் அது html என்று தெரிந்தது.கலைச்சொல்லை ஆங்கிலத்தில் கொடுத்துவிட்டாலும் பரவாயில்லை. இப்படி தமிழில் கொடுத்து குழப்பும் போது அதற்கான ஆங்கில விளக்கத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இதனால் மிகவும் தமிழிலேயே ஆங்கில வார்த்தை எழுதுவது தவிர்த்து எழுதுவது என்பது கடினமே. அனைவருக்கும் புரியும் படியான "கொச்சைத் தமிழி"லேயே எழுதலாம்.