Wednesday, November 30, 2005

மூன்று ஹைக்கூக்கள்

நீ என்னை அழைக்கும்போதெல்லாம்
சொல்ல நினைப்பேன்
"ஐ லவ் யூ"
ஆனால் சொல்வதென்னவோ
"ப்ரசென்ட் மேடம்"

-------------------------------

நீ கூப்பிடும்போதெல்லாம் தோன்றும்...
இதற்காகவே எனக்கு
பெயர் வைக்கப்பட்டதோ?

-------------------------------

பேனாவை வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கம்
உன்னிடமிருந்து வரவில்லை...
உன் பேனாவை என்னிடம்
தந்ததிலிருந்து வந்தது

3 comments:

Thats Secret said...

testin comment

Sundar Padmanaban said...

கோகுல் குமார்,

முதலில் நீங்கள் ஹைக்கூ என்றால் என்னவென்று நன்கு அறிந்துகொண்டு ஹைக்கூக்கள் எழுதினால் நலம்.

ஹைக்கூவில் உவமையோ உருவகமோ இருக்கக் கூடாது. பெரும்பாலும் இரண்டரை அடிகள். நேரடியாக ஒரு காட்சியைக் குறிப்பிட வேண்டும். உதாரணத்திற்கு சுஜாதா விகடனில் குறிப்பிட்டிருந்த ஒரு ஹைக்கூ:

ஆற்று நீரில்
தலையசைக்கும்
பிணம்

புரிகிறதா?

மேலும் முயலுங்கள். முயற்சி வெற்றியைத் தரும்.

அன்புடன்
சுந்தர்.

Thats Secret said...

ப்லாக் டைட்டில் மாதிரி தோணினத சொன்னேன்
அவற்றை ஹைக்கூ என அழைத்தமைக்கு மன்னிக்கவும்
ஊக்குவிப்புக்கு நன்றி