Tuesday, December 27, 2005

பொது அறிவு

எனக்கு தெரிஞ்ச அரிதுன்னு (நம்புற) பத்து விஷயங்கள் இதோ:

1.வின்டோஸில் con என்று (எந்த கேப்பிடல்,சிறிய எழுத்து காம்பினேஷனிலும்) எந்த ஃபைலையும் சேமிக்க முடியாது
2.ஃப்ளாஷ்பேக் முறையில் முதலில் கதை சொன்னவர் அல்லது அதை கண்டுபிடித்தவர் 'அகிரா குரோசோவா'
3.ஒரு நிமிடத்திற்கான செல்ஃபோன் கட்டணம் குறைவாக உள்ள நாடு 'இந்தியா'
4.குளிர்நீரானால் தலையிலிருந்தும் சுடுநீரானால் காலிலிருந்தும் ஊற்றி குளிக்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதா.
5.முட்டையில் வெள்ளை கரு தான் உயிர் மஞ்சள் கரு அது உண்ண இருக்கும் உணவு
6.எஸ்.ஜே.சூர்யா நடித்த முதல் படம் 'நேருக்கு நேர்'
7.தமிழிலும் , ஆங்கிலத்திலும் ஒரே உச்சரிப்பு ஒரே பொருள் தரும் வார்த்தை
'ஏடிட்டோரியல்' அதாவது ஏடு + இட்டோர் + இயல் ஆங்கிலத்தில் editorial
8.உலகப்புகழ் பெற்ற வலது கை ஆட்டக்காரரான சச்சினிடம் ஆட்டோகிராஃப்
வாங்கினால் கவனியுங்கள் அவர் இடது கையில் தான் போடுவார் (அவர் இடது கைப்பழக்கம் உள்ளவர், ரொம்ப சுற்றி வளைத்து விட்டேனோ)
9.தேன் தலையில் தேய்த்தால் நரைக்காது,பாம்பு தேன்,பால் சாப்பிடாது
10.காந்தி வாழ்நாளில் விமானப்பயணம் செய்ததில்லை (அப்போது விமானம் மக்கள் பயன்பாட்டில் இருந்தது)

4 comments:

rv said...

//5.முட்டையில் வெள்ளை கரு தான் உயிர் மஞ்சள் கரு அது உண்ண இருக்கும் உணவு//
வெள்ளை கருவில் அல்புமின் போன்ற புரதங்கள் மட்டுமே இருக்கின்றன. மஞ்சள் கருவில் புரதங்களும் கொழுப்பும் இருக்கின்றன. இரண்டிலும் உயிர் கிடையாது.

மஞ்சள் கருவில் மேல் தனியாய் ஒட்டியிருக்கும் ஜெர்மினல் டிஸ்கில் தான் உயிர் இருக்கிறது.

மற்றவற்றிற்கு நன்றி

Thats Secret said...

மிக்க நன்றி ஒரு பி.எஸ்.ஸி சுவாலஜி படிச்ச (ஒழுங்கா படிக்காத) நண்பன் சொன்னது அது இரு வருடங்களுக்கு முன்பு.இப்போ இருக்கு அவனுக்கு

லதா said...

// தமிழிலும் , ஆங்கிலத்திலும் ஒரே உச்சரிப்பு ஒரே பொருள் தரும் வார்த்தை
'ஏடிட்டோரியல்' அதாவது ஏடு + இட்டோர் + இயல் ஆங்கிலத்தில் editorial //

தமிழில் போர் என்பதற்கு ஆங்கிலத்தில் war
தமிழில் வார் என்பதற்கு ஆங்கிலத்தில் pour
:-))

லதா said...

// தமிழிலும் , ஆங்கிலத்திலும் ஒரே உச்சரிப்பு ஒரே பொருள் தரும் வார்த்தை
'ஏடிட்டோரியல்' அதாவது ஏடு + இட்டோர் + இயல் ஆங்கிலத்தில் editorial //

தமிழில் போர் என்பதற்கு ஆங்கிலத்தில் war
தமிழில் வார் என்பதற்கு ஆங்கிலத்தில் pour
:-))