Sunday, January 08, 2006

தமிழ் (சினிமாப்பாடல்)- ல ஒரு சந்தேகம்

தமிழ் - ல எனக்கு விருப்பம் அதிகம். ஆனா அறிவு அதிகமில்ல தான், இருந்தாலும் ரொம்ப நாளா எனக்குள்ள இலக்கணம் சம்பத்தப்பட்ட சந்தேகத்தை கேக்குறேன் .அதிலயும் இது ரொம்ப பிரபலமான இளம் கவிஞரோட பாடல்.சில பள்ளிகள்ல பிரேயர் நேரத்தில் கூட பாடப்பட்டது.

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" அப்டின்னு ஆட்டோகிராஃப் படத்தில ஒரு பாட்டு வரும்.
ஒவ்வொரு என்பது பன்மையை குழுவை குறிக்கும் வார்த்தை தான் ஆனால் அதற்கடுத்த வார்த்தை பன்மையை குறிக்கக்கூடாது.

பூக்களுமே அப்படிங்கறது பன்மை இது வந்தா ஒண்ணு இதுக்கு முன்னாடி "ஒவ்வொரு" வராது,"எல்லா" தான் வரும். "ஒவ்வொரு" வந்தா பூவுமே, மாணவனுமே, மொழியுமே என ஒருமை தான் வரும் அதான் "சொல்கிறதே" .ஒண்ணு பாடல் "ஒவ்வொரு பூவுமே சொல்கிறதே"ன்னு வரும் இல்லையா "எல்லா பூக்களுமே சொல்கின்றனவே" -அப்டின்னு நினைக்கிறேன்.

குழப்பம் வந்தால் ஆங்கிலத்தில் ஒப்பீடு செய்து பாருங்களேன் Anyone is (not are) liable to fall ill,Every car has (not have) been tested

இலக்கணப்பிழை நடைமுறையில் சாதாரணமானதே ஆனால் கவிஞர்களுக்குமா?
கவிதைகள் அப்போதைக்கு ரசிக்கப்படுபவை என்பதல்லாமல் எதிர்கால சந்ததியும் படிக்கும் என்பதாலேயே கேட்டேன்.
எதிர்காலத்தில தமிழ் இருந்தாத்தானேங்கறீங்களா....

2 comments:

கொழுவி said...

இது ஏற்கெனவே ஒருவர் (வா.மணிகண்டனாயிருக்க வேண்டும்) கேட்டிருந்தார். அதில் கண்ணதாசன்கூட இப்படி எழுதியிருக்கிறாரென்று யாரோ எடுத்துக்காட்டுக்கள் சொல்லியிருந்தனர். பாடல்களில் எடுக்க வெளிக்கிட்டால் இப்படி நிறைய எடுக்க முடியும். பாடல்களை மன்னித்து விடுவோமே.

கைப்புள்ள said...

உண்மை தான். எனவே தான் ஆங்கிலக் கவிஞர்கள் தங்களைக் காத்துக் கொள்ள "Poetic Liberty" என்ற பதத்தையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். தமிழில் இதனைக் "கவிதை சுதந்திரம்" என் வழங்கலாமா?