Wednesday, January 18, 2006

என்னாத்த சொல்வேனுங்கோவ்

நேற்று லேட்டாக விகடன் படித்தேன் சுஜாதா கற்றதும்பெற்றதும் முடித்து விட்டார்(இப்போதைக்கு).நிறைய அறிவியல்பூர்வமான விஷயங்கள், சர்ச்சைகள், லைட்டாக பந்தா ஆனால் எல்லாமே ரசிக்கக்கூடியதாய்.

அப்புறம் கருவாச்சி காவியம், வைரமுத்து எழுதியது ரசிக்க முடிகிறது.சகஜமாக அந்தரங்க உறுப்புகளைக்கூட வர்ணிக்கிறார்.ஆனால் நேற்று படித்ததில் அதில் வரும் ஆட்டுக்கு ஆண்மையழிக்கிற டாபிக்கில் ஏதோ மிருக வைத்தியர் ரேஞ்சுக்கு விளக்குகிறார்.எனக்கு குமட்டியது.முன்பு இதே எஃபெக்டில் பிரசவத்தை விளக்கினார்.பெண்கள் புளகாங்கிதப்பட்டு தனக்கே பிரசவம் பார்த்துக்கொண்ட மாதிரி இருந்தது என்று பாராட்டியிருந்தார்கள், ஸாரி நேற்று எனக்கும் அதே மாதிரியான ஒரு ஃபீல் தான்.

மதன் பதில்கள்,வழக்கம் போல் எல்லாமே அருமை.'காஸ்' பற்றி கேட்ட வாசகரை ஓவராகவே வாரி விட்டார்.

விஜயகாந்த் பேட்டி எல்லா கேள்விகளுக்கும் தெளிவான பதில்கள், அரசியல்வாதியாக தேறுவார் போலத்தான் தெரிகிறது.ஆனால் இவரிடம் இப்படி வக்கனையாக கேள்வி கேட்பவர்கள் முக்கிய அரசியல் தலைகளிடமும் நாக்கை பிடுங்கும் கேள்வி கேட்டால் பத்திரிக்கை தர்மத்தை பாராட்டலாம்

2 comments:

நாமக்கல் சிபி said...

//ஆனால் நேற்று படித்ததில் அதில் வரும் ஆட்டுக்கு ஆண்மையழிக்கிற டாபிக்கில் ஏதோ மிருக வைத்தியர் ரேஞ்சுக்கு விளக்குகிறார்.எனக்கு குமட்டியது.முன்பு இதே எஃபெக்டில் பிரசவத்தை விளக்கினார்//

இதே போல் ஏற்கனவே ஒரு முறை கருவில் வளரும் குழந்தையை அழிப்பது எப்படியென்று (நாட்டு வைத்தியச்சி மூலம்) எழுதியிருந்தார்.

Iyappan Krishnan said...

""என்னாத்த சொல்வேனுங்கோவ்" "

நீங்க வச்சிருக்கிற தலைப்பில இருக்கிற பாடல் கேக்கும்போதெல்லாம் குமட்டிக்கிட்டு வருது சார். ஒரு விவஸ்த கெட்ட தனமா எழுதி...


" வடுமாங்கா ஊறுதுங்கோ "
" தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ "



நேரடியான அர்த்தம் கொண்டால் ஏதுமில்லை தான். ஆனால்

கெட்டப் பையன்ன கிட்டு மாமா.......

என்ற வரியினால் மேலுல்ல வரிகளுக்கு வரும் உள்ளர்த்தம் அசிங்கமானது ஆபாசமானதாய் இருக்கிறது.


எழுதியவர் யாராயிருந்தாலும் கடுமையாக கண்டனத்திற்குறிய பாடல். அதற்கு நேரடியாகவே அந்தரங்க உறுப்புகளைக் குறிப்பிட்டு பாட்டெழுதி இருக்கலாம் அந்தப் பாடலை எழுதியவர். காசுக்காக எழுத்து விபச்சாரம் செய்கிறார்கள் :(

என் கண்டனங்கள்

அன்புடன்
ஜீவா