விஜயகாந்த் நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.விஜயகாந்த்துக்கு ஓட்டு போட்டவர்களின் நம்பிக்கை, நாசர் எதிர்ப்பு, அவர் வெற்றி பெற்ற தொகுதி மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை விடுங்கள்...
என் கேள்வியெல்லாம் அவர் வென்றால் அது செல்லுமா? ஏற்கனவே ஜெயா பச்சன் இது போன்ற பதவி வகித்ததற்கு தானே ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகிக்கக்கூடாதென உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
அதிலும் பணம் வந்தால் மட்டுமல்ல புகழ் வந்தாலும் கூட அது ஆதாயம் தரும் பதவி தான் என்று தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டு விட்ட நிலையில் விஜயகாந்த் நிற்பது அர்த்தமற்றது இல்லையா?
அப்படியானால் விஜயகாந்த் எந்தப்பதவியை ராஜினாமா செய்வார்? எதை ராஜினாமா செய்தாலும் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்குமே.
ஆனால் யாருமே இதுவரை இப்பிரச்னையை இக்கோணத்தில் எடுக்காததற்கு காரணம் இரு பக்கம் கூர்மையான கத்தி என்பது தான்.ஏற்கனவே அகில இந்திய அளவில் இப்பிரச்னை ஒரு சுற்று வந்து விட்ட நிலையில் தமிழகத்திலும் இப்படி ஆரம்பித்தால் ஒவ்வொரு கட்சியிலும் மற்ற கட்சிகள் ஆராய்ச்சியில் இறங்கி பலரை பதவியிறக்க இப்போதே ஆமையாக இயங்கும் நீதி மன்றங்களில் வழக்குகள் போட்டு இன்னும் கொஞ்சம் மந்தப்படுத்தும் முயற்சியில் இறங்கலாம்.
அப்படி நிகழ்ந்தால் விஜயகாந்த்திற்கு புகழ் நிச்சயம் கிடைக்கும்,அரசியல் களமும் சூடாகும். பத்திரிக்கைகளுக்கும் நல்ல தீனி தான்.மக்கள் அதாவது நாம்... வேடிக்கை பார்க்க வேண்டியது தான் வழக்கம் போல.
Categories: india'n,politician
Friday, June 30, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கோகுல்...ஏற்க்கனவே எம்.ஜி.ஆர் சி.எம் ஆ இருந்தப்ப நடிகர் சங்கத்தலைவரா இருந்தார் அப்படீன்னு நினைக்கறேன்...
ஆனா இது ஒரு பிரச்சினை இல்லை அப்படீன்னு தோனுது...இருந்துட்டு போகட்டுமே..மக்கள் ஏன் தப்பா நினைக்கறாங்க ??
நான் சொல்ல வந்தது அதுவல்ல ரவி எம்ஜிஆர் கால அரசியல் இன்று பண்ண முடியாதே
இப்பிரச்னையை யாராவது தொடங்கலாம் என்று ஒரு சின்ன ஆருடம் அவ்வளவே
கொஞ்சம் பேராவது நினைப்பாங்கன்னு தான் தோணுது நானும் மக்களில் ஒருவன் தானே எனக்கு தப்புன்னு தான் தோணுது ;)
Post a Comment