Tuesday, June 06, 2006

லட்டு பாஸாயிட்டான் ஸ்வீட் எடு

நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது அறிந்ததே.நான் இப்போது சுயதொழில் புரிவதால் நாமக்கல்லின் ஒரு இணைய மையம் (Browsing Center) தான் அலுவலகம்.நேற்று இந்த பரபரப்பில் நானும் முடிவு அறிவிக்க ஆரம்பித்தேன்.இந்த மாதிரி நாட்களில் தான் இம்மாதிரி மையங்களுக்கு வாய்ப்பு, ஒரு முடிவு அறிவிக்க பத்து ரூபாய்.

என் அத்தை மகன் பத்தாவது அவன் செல்லப்பெயர் லட்டு, இனி வருவதெல்லாம் அவன் அம்மாவின் பேட்டி:

"காலைல ஏழு மணி இருக்குங்கண்ணு, படக்குன்னு ஏந்திரிச்சான், பிதா சுதன் போட்டான்.அவனுக்கு புடிச்சது ஏசு தான்.அம்மா தண்ணி எடுத்து வை குளிக்கணும்னான்.எனக்கு ஒண்ணும் புரியல,அட நம்ம புள்ளைக்கு பக்தி எல்லாம் வந்துருச்சே அப்டியே சாமி ரூம் போனான் அவனுக்கு அடுத்து புடிச்சது கருமாரி அப்டியே கண்ண மூடி கும்பிட்டான்,வெளியே கிளம்பினான்.எங்க கண்ணு போறன்னேன், ஆஞ்சநேயர் கோயிலுக்குன்னான்,அம்மாவுக்கே அம்பது காசு கொடுக்காதவன் அவருக்கு அஞ்சு ரூபா உண்டில போட்டிருக்கானப்பா

என்னக்கூட்டிட்டு இண்டர்நெட் வந்தான்,கோகுலு இருப்பான்னு நெனக்கலயாட்டமிருக்கு, யம்மா என்னம்மா மாமா உள்ள இருக்கு அதனால என்னடா அவன்ட்டயே குடு சீக்கிரம் பாப்பான்னேன் என்ன நினைச்சானோ சத்தமில்லாம பக்கத்தால வேற ஆளுகிட்ட குடுத்தான்

கோகுல் முதுகப்பாத்தே டேய் லட்டு வாடா இங்கேன்னான் கிக்கிக்கீன்னு போனான் 234ன்னு பேப்பர் தந்தான் கோகுலு லட்டு பாசாயிட்டே ன்னான் நான் அப்பவே சொன்னேன் மாமா கண்டிப்பா பார்டர் பாஸாய்டுவேன்னுன்னான்

வேட்டே அப்பா கிட்ட தானே டேய் எத்தனடா மார்க்கு? ஒடனே நம்மாளு மார்க்கு தெர்லப்பா பாஸாயிட்டேன் அவருக்கு இடி இடிச்சாப்ல ஆய்டிச்சி அது யார்ராவன் பாஸானத மட்டும் சொல்றவன்
செரி இனி என்ன பண்ண ரெண்டு நாள்ல என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணனும்,நீயும் சொல்லு கோகுலு மாமாகிட்ட"

மதிப்பெண் மோகத்தில் அலையும் பெற்றோர் மத்தியில் திருப்தி படும் இவர் தங்கம் தான்.மனனக் கல்வியில் திறமை என்று காட்ட ஏதுமில்லை என்பது என் கருத்து.குறைந்த மதிப்பெண் வாழ்க்கையை பாதிப்பதும் தவறானதே.ஓவியத்தில் விருப்பமிருப்பவன் கணிதத்தில் பெயிலாகலாம் அதற்காக உடனே (இங்கே) பட்டறைக்கு அனுப்புவது என்ன நியாயம்? ராமானுஜரே பட்டப்படிப்பில் கணிதத்தில் மட்டும் அதிக மதிப்பெண்ணும் மற்ற பாடங்களில் பெயிலாவதுமாக இருந்தாராமே

எப்படியாயிருந்தால் என்ன...? லட்டு பாஸாயிட்டான் ஸ்வீட் எடு கொண்டாடு

Categories: ,

7 comments:

நாமக்கல் சிபி said...

லட்டு பாஸானதில் சந்தோஷம்!
அதோடு பாஸானதிலேயே திருப்திப்பட்டுக்கொண்ட பெற்றோர்கள் - இன்னொரு சந்தோஷம்!

நாமக்கல் சிபி said...

அதுசரி! கோகுல் குமார்
நாமக்கல்லில் எந்த பிரவுஸிங் செண்டரில் இருக்கிறீர்கள்?

dondu(#11168674346665545885) said...

திசை திருப்பலுக்கு மன்னிக்கவும். இந்த நிகழ்ச்சி "முத்து பாசாயிட்டான்" என்ற பாட்டுடன் அமிதாப் பச்சன் நடித்த விளம்பர படத்தை ஞாபகப் படுத்துகிறது.

இதை நான் தமிழில்தான் பார்த்தேன் என்றாலும் ஒரிஜினல் ஹிந்தியில் என்ன பேசியிருப்பார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. கடைசியில் அமிதாப் மெதுவாக "காசு முத்து கொடுப்பான்" என்று கூறிவிட்டு அப்பால் நகல, முத்துவின் முகம் போகும் போக்கை பார்க்க ஆயிரம் கண் வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Prabu Raja said...

//.ஓவியத்தில் விருப்பமிருப்பவன் கணிதத்தில் பெயிலாகலாம் அதற்காக உடனே (இங்கே) பட்டறைக்கு அனுப்புவது என்ன நியாயம்? ராமானுஜரே பட்டப்படிப்பில் கணிதத்தில் மட்டும் அதிக மதிப்பெண்ணும் மற்ற பாடங்களில் பெயிலாவதுமாக இருந்தாராமே//

எங்கியோ இடிக்குதே.

ரொம்ப அடிபட்டு எழுதினா மாதிரி இருக்கு.

;)

SnackDragon said...

யதார்த்தமாக எழுதியது பிடிச்சுருக்குங்க

Thats Secret said...

நன்றி கார்த்திக்

ஹி ஹி பிரபு ராஜா கண்டுக்காதீங்க

நன்றி ராகவன் அந்த பாடலை வைத்து தான் அந்த வரிகளை எழுதினேன்

பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் இருக்கும் ICE செண்டர் உள்ளே வந்தீர்களானால் நடு நாயகமாக இருக்கும் கணிணியில் உட்கார்ந்திருப்பேன் சிபி

நாமக்கல் சிபி said...

//எங்கியோ இடிக்குதே.

ரொம்ப அடிபட்டு எழுதினா மாதிரி இருக்கு.
//

பிரபு ராஜா,

ஏதேனும் வகுப்பில் பெயிலாகி விட்டால் நாமக்கல்லில் பட்டறைக்கு அனுப்புவது சகஜமான ஒன்றுதான்.

அதைத்தான் நண்பர் எழுதியுள்ளார். ஃபெயிலானதினாலேயேபட்டறைக்குச் சென்ற நிறைய பேர்களை பார்த்துள்ளேன். படிக்கும் போதே சரியாகப் படிக்காவிடில் பட்டறைக்கு அனுப்பிவிடுவோம் எனு எச்சரிக்கும் பெற்றொர்களையும் பார்த்ததுண்டு.