Sunday, June 11, 2006

பெண்ணியம் போல் இது ஆணியம்

நான் அவ்வப்போது பெண்கள் மலர்,குடும்ப மலர் மாதிரி பத்திரிக்கைகளை படிப்பதுண்டு.பெண்கள் சமைக்க மட்டுந்தானா (அதிரடியாக வேறு வார்த்தை போட்டும் கேட்டிருந்தார்கள்) என்று முதல் பக்கத்திலும், நூல்கோல் சூப் வைப்பது எப்படி என்று கடைசி பக்கத்திலும் கோலம், வீட்டுக் குறிப்புகள்,ஆண் வர்க்கத்தை திட்டி ஒரு சிறுகதை என்று ஏகப்பட்ட வெரைட்டி கிடைக்கும்.

ஏனென்றே தெரியவில்லை பெண்களின் உலகம் அதாவது பெண்களின் மீடியா உலகம் ஆண்களை திட்டுவதாகவே அமைந்துள்ளது.எந்த பெண்கள் பத்திரிக்கையிலாவது ஆண்களின் படம்,அவர்களை பற்றிய குறிப்பு,மாதவன் என்ன ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார் என்றெல்லாம் இருக்கிறதா? இதே ஆண்கள் (சரி அப்படி எதும் இந்தியாவில் இல்லை/எனக்குத் தெரியவில்லை) அல்லது ஆண்கள் அதிகம் வாங்கும் பத்திரிக்கையை பாருங்கள்.சானியாவில் இருந்து நமீதா வரை எல்லா தகவலும் இருக்கும்,

ஓகே சீரியஸ்... என்ன சொல்ல வந்தேன் என்றால் நேற்று செல்வி தொடரில் கடைசி காட்சி பார்த்தேன் (ந்ண் எப்போதும் பத்து மணிக்கு மேல் தான் வீட்டிற்கு போவது...சீரியல்களை தவிர்க்க,ஆனாலும் நேற்று சீக்கிரம் போய் விட்டேன்) ராதிகா வில்லனை பார்த்து சில டயலாக்குகள் பேசி விட்டு கடைசியில் ஒருவரை ஒரு தள்ளு, இன்னொருவரை ஒட்சே ஒரு அடி ஆஹா...எனக்கு ஏனோ இது அந்நியமாகவே பட்டது,பெண்களை பற்றிய பழைய அபிப்ராயமோ என்னவோ...பெண்கள் அதிகம் பார்க்கும் சீரியலில் பெண் போராடுவது,சண்டை போடுவது எல்லாம் சகஜம் தான் ஆனால் ஆண்களை திட்டுவது,ஆண்களை அடிப்பது ஏன் என்று தான் கேட்கிறேன்.

ஆண்கள் அதிகம் டாமினேட் செய்யுமிடமென சினிமாவை எடுத்துக் கொண்டால் அங்கே கூட ஆண்கள் ஆண்களுடன் தானே போராடுகிறார்கள் (சில அரிதான நிகழ்வுகளை தவிர்த்து).

அதே போல பெண்கள் விளம்பரங்களில் கேவலமாக சித்தரிக்கப் படுகிறார்கள் என்று போராட்டங்கள் நடத்துகிறார்கள்.அதே செல்வி தொடரின் இடைவேளையில் விளம்பரம் ஒன்று போடப்பட்டது, "இவரை நான் பத்து ரூபா கொடுத்து வாங்கினேன்" என்கிறார் ஒரு அழகி, பதறிப்போய் பார்த்தால் ஒரு பியூட்டி சோப் வாங்கினாராம் அந்த ஈ அழகனை அதற்காக 10 ரூபாய்க்கு வாங்கியதாக சொல்கிறார்.புற அழகை பார்த்து மயங்குவது சரியா தவறா என்கிற வாதம் வேண்டாம் (ஏனென்றால் ஆண்கள் பக்கம் வாதாடி நான் தோற்று விடுவேன்).அதென்ன பத்து ரூபாயில் ஆண்களை கேவலப்படுத்துவது, அசின் வரும் ஒரு கிரீம் விளம்பரத்திலும் இதே போலத்தான் கறுப்பாக இருக்கும்போது வேண்டாம் என ஒதுக்கும் ஆண் அசின் இக்கிரீம் பூசி அழகானதும் ஓடிப்போய் கெஞ்சுகிறார்.ஆண்களின் குணாதிசயம் தானே என்கிறீர்களா அப்படியானால் பெண்களை கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் கண்டு கொள்ளாமல் விடுங்கள் பெண்களின் குணாதிசயம் அப்படியென்று.

அறியப்படுபவை (இவற்றில் ஒன்றோ பலவோ உண்மையாக இருக்கலாம்)
1.ஆண்கள் கேவலமானவர்கள் , பெண்கள் உண்மை பேசுபவர்கள்
2.ஆண்கள் கேவலமானவர்கள், சகிப்புத்தன்மை உடையவர்கள்
3.ஆண்கள் கேவலமானவர்கள், உப்பு போடாதவர்கள்
(இத்தோடு நிறுத்திக் கொண்டால் இப்பதிவு பெண்கள் இதழுக்கு போய் விடும்)
4.பெண்கள் ஆண்களை திட்ட முடியவில்லை திட்டுவதை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்
5.4வது சொன்னது உண்மை என்று மீடியா நினைக்கிறது
6.பெண்கள் குறைகளை பெரிது படுத்துபவர்கள்

எப்படியாயினும் முடிவு ஒன்றே ஒன்று தான் இனி ஸ்ட்ரிக்டாக பத்து மணிக்கு முன்னால் வீட்டுக்கு போகக்கூடாது.

Categories:

3 comments:

மாதங்கி said...

பெண்களுக்கு பத்திரிகைகள் இருப்பது போல் ஆண்களுக்கென்று தனிப்பத்திரிகை இருக்கவேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு. அப்படி எதாவது இருந்தால் சொல்லுங்கள் அதற்கு நான் எழுதுகிறேன்.

Dubukku said...

Etho nambalala mudinja uthavi :)))

http://www.desipundit.com/2006/06/12/aaniyam/

ஜீன் said...

சீரியலில் கூடி அழும் நெரம் போக மற்ற நேரத்தில் பெண்ணே பெண்ணிடம் எவ்வளவு கீழ்தரமாக சவால் விடுகிறார் கீழ்தரமாக பழி வாங்குகிறார்கள். யார் சொன்னது சீரியலில் பெண்களுக்குள் மோதிக்கொள்வதில்லை என்று.