முதல் முதலாக பத்தாம் வகுப்பு படித்தபோது இணையம் எனக்கு அறிமுகமானது.study in canada என்கிற விளம்பரத்தை பார்த்து விட்டு தட்டுத்தடுமாறி அறுபது ரூபாய் சேர்த்து இணைய மையம் வந்தேன்.ஏசி, அமைதியான இடத்தில் மெல்லிய இசை, ரெண்டே வார்த்தை பதில்கள் எனக்கு இது நம்மூர் தானா என்ற குழப்பத்தை உண்டாக்கின.தள முகவரி அடிக்க வேண்டிய இடத்தில் பொறுமையாக அடித்து வைக்க page cant be displayed காட்டியது.இன்னும் பொறுமையாக திரும்ப அடித்தேன் திரும்ப அதே...சுமார் அரை மணி நேரப்போராட்டத்திற்குப் பிறகு ஜெயிக்கவில்லை...ஓனரைக் கூப்பிட்டேன்.அவர் இதுக்கு பேர் email id இது போட்டா ஒண்ணும் வராது இதப்போடணும் என்று அதில் இருக்கும் முகவரியை அடித்தார், வந்தது.அவர் போனதும் அதை close செய்தேன்.நானே திரும்ப இன்னொரு விண்டோ திறந்து studyincanada.comக்காக s என அழுத்தியதும் அவ்வெழுத்தில் ஆரம்பிக்கும் முன்பே பார்க்கப்பட்ட தள முகவரிகள் காட்டப்பட்டன.ஏகப்பட்ட முகவரிகள் எல்லாமே sex என ஆரம்பித்தன, தலையில் இரு கொம்புகள் முளைத்தன
நண்பர்களிடம் பகிர்ந்தேன்... அவ்வளவு தான் ஒரு சிஸ்டத்திற்கு நான்கைந்து பேர் படையெடுப்போம் அப்போது தானே அறுபது ரூபாயும் ஷேர் ஆகும் அப்புறம் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் போல மூன்று மாதங்களுக்கு மேல் எனக்கே உவ்வே ஆனது.இணையத்தின் மற்ற பக்கங்கள் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்,இப்போது வரை ஆச்சர்யம் யாரிடமும் நான் எதையும் கேட்கவேயில்லை மின்னஞ்சல் எப்படி வேலை செய்கிறது என்பதில் ஆரம்பித்து இணையம் இயங்குவது வரை இணையமே எனக்கு கற்றுத் தந்தது.
அடுத்து நேரம் அதிகம் வீணானது இணையத்திலிருக்கும் டேட்டிங் தளங்களால் தான்.இணையத்தில் நான் புரிந்து கொண்ட முதல் பாடம் "இது அமெரிக்கர்களுக்கானது".இணையத்தில் நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி பெற அதிக வாய்ப்பு நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் தான்.டேட்டிங்கில் ஆரம்பித்து ஆன்லைன் வர்த்தகம் வரை இந்தியாவில் ஒர்க் அவுட்டாக வாய்ப்புகள் மிகக்குறைவு.
காரணம் இந்தியர்கள் "touch & feel" நம்பிக்கை உடையவர்கள்.தொட்டுப் பார்க்காமல் எதையும் வாங்க மாட்டோம்.அமெரிக்கர்களைப் போல ஒரு டிஜிட்டல் இமேஜைப் பார்த்து பொருளை நம்பி வாங்க மாட்டோம் வாங்கவும் முடியாது.தவறு இரு பக்கமும் தான்.கஸ்டமர் கேர் அவ்வளவு மோசமாக இங்கே உள்ளது.இப்போது நிறைய கம்பெனிகள் வந்திருந்தாலும் இந்திய ஆன்லைன் வர்த்தக கம்பெனிகள் இதை இன்னமும் கூட புரிந்து கொள்ளவில்லை என்றே கருதுகிறேன்.தான் ஏமாற்ற மாட்டோம் என்ற நம்பிக்கையை இந்தியாவில் ஒரு முறை உருவாக்கி விட்டால் பலமான அஸ்திவாரம் அமைத்து விடலாம்.
நான் சொல்ல வந்தது இதுவல்ல, இப்போதாவது உருப்படியாக மீதி நேரத்தை வலைப்பூக்கள் பதிப்பதில் செலவு செய்கிறேன் முன்பெல்லாம் டேட்டிங் தளங்களை பார்ப்பதும் ஆன்லைன் நண்பர்களை (ஹானஸ்ட்லி இருபாலினமும் தான்)சேர்ப்பதும் மட்டுமே வேலை.ஆணோ,பெண்ணோ சந்தித்ததில்லை.சில சமயங்களில் என்னால் சில சமயங்களில் அவர்களால்.முக்கிய காரணம் இணைய வலை எப்படிப்பட்ட ஆளாகவும்,புரிதல் உடையவராகவும் பழகி இருப்பினும் பார்க்காதவராக இருந்தால் நம்பிக்கையின்மையோடான ஒரு பயத்தை உருவாக்கி விடுகிறது.சமீப காலங்களில் வலைப்பதிவர் சந்திப்புகளில் எனக்கு முதலில் ஆச்சர்யமும் பின்பு ஆர்வமும் ஏற்பட்டது.ஆனால் நான் அச்சமயங்களில் எல்லாம் மிஸ் பண்ணி விடுகிறேன் அது மட்டுமின்றி தலைப்பை பார்த்து விட்டு படிக்கப் போனால் எல்லாம் தனி மனித அ சாதி சண்டைகளாக இருக்கிறது ஆதலால் நண்பர் வட்டம் ஏதும் இல்லை,நாமக்கல் நண்பர்கள் இருந்தால் நேரில் பார்க்கலாம்.மற்றபடி மெயிலில் சில நண்பர்கள் சந்தேகம் கேட்பதுண்டு.
ஆனால் இப்போது வேறு மாதிரி நிலை,இணையம் எனக்கு பணம் தர ஆரம்பித்து விட்டது. ஆம், வேலையை விட்டு விட்டு மேற்படிப்புக்காக கல்லூரி சேரும்வரை வீட்டில் இருக்கலாமென இங்கு வந்தேன். வலைப்பூக்களில் ஏதாவ்து செய்யலாம் என்று இணைய மையத்தில் உறுப்பினராக பணம் கட்டியபோது நான் web designer என்று சொல்ல அதே நாளில் ஒருவர் தங்களுக்கு ஒரு தளம் வேண்டுமென்று கேட்க ஒரு கல்லூரிக்கான அத்தளம் உருவாக்க ஆரம்பித்தேன்.அவர்கள் அதற்கு முன் bid செய்த ஒருவரின் சாம்பிள் தளத்தை காட்டினார்கள்,நான் தவறாக சொல்லவில்லை ஆனால் அது மிகவும் சாதாரணமானது,அதை விட மலிவாக தரமானதாக செய்து தர முதல் வேலை ஆரம்பமானது இப்போது வரை நான்கு ப்ரொஜெக்ட்கள் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கின்றன.
சொந்த கம்பெனி ஆரம்பிக்க யோசிக்குமாறு மார்க்கெடிங் நண்பர்கள் சொல்கிறார்கள்,எனக்கு இதுவே கனவா,நனவா என்று தெரியவில்லை.
Categories: internet
Wednesday, June 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Gokulkumar,
//அதை விட மலிவாக தரமானதாக செய்து தர முதல் வேலை ஆரம்பமானது இப்போது வரை நான்கு ப்ரொஜெக்ட்கள் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கின்றன.
சொந்த கம்பெனி ஆரம்பிக்க யோசிக்குமாறு மார்க்கெடிங் நண்பர்கள் சொல்கிறார்கள்,எனக்கு இதுவே கனவா,நனவா என்று தெரியவில்லை.
//
பாராட்டுகள். மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துகள். விடாமுயற்சியே சிறந்த மூலதனம்.
நன்றி சுந்தர் மிக்க நன்றி, எனக்கும் அப்படி(ஆரம்பித்து விடுவேன் போல)தான் தோன்றுகிறது.
கல்வியில் அருமை தெரிவது அது நமக்கு பயன்படும்போதுதான் நன்கு தெரியும். சரியாக சொல்லப்போனால் நாம் கற்ற கல்வி பணமாகும்போது.
வாழ்த்துக்கள் கோகுல் குமார்.
சொந்த கம்பெனி ஆரம்பித்து வெற்றி பெற் வாழ்த்துக்கள்
hai gokul kumar
எனக்கும் web site create பண்ணவேண்டும் என்ற ஆவல் நெடுநாட்களாக உண்டு எனக்கும் கற்று தருவீர்களா?
Post a Comment