சமீபத்துல வைகோ எங்க கூட்டம் போட்டாலும் அங்க யாராவது ஒருத்தர் எந்திரிச்சி "அம்மா கிட்ட எவ்ளோ தலைவா வாங்கினீங்க?" என்றோ "40 கோடி என்ன பண்ணீங்க தலைவா" என்றோ டார்ச்சர் பண்ணிய விஷயம் தினசரி ஏடுகளில் (தினகரனில் பெருசா...) வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.அவரு எவ்ளோ கடுப்பாகிருப்பாரு? அது உண்மையோ என்னவோ அத்த விடுங்க (அதான் நினைச்சிருப்பாரு ஒரு வேளை காசு கொடுத்து எதிர்க்கட்சி சதியோன்னு அதுக்காக இவரும் சதி செஞ்சோ என்னவோ) நேத்தோ, முந்தா நேத்தோ கருணாநிதி பிரச்சாரம் பண்ணும்போது,"தலைவா சன் டிவி வெச்சு கோடி கோடியா சம்பாதிக்கிற... எனக்கு (?!) எதுமே தர்லியே" என்று நேரிடையாக கேட்டிருக்கிறார், வைகோ போல கருணாநிதி பொறுமையாக பேசவெல்லாம் இல்ல... கில்லியில் வருவது போல "யேய் யார்யா அது தூக்கு அந்த ஆள" என்று கட்டளை பறக்க 'தொண்டர்'களால் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார்.
(ஒரு வேளை ஆள் ஏற்பாடு பண்ணி செய்யப்பட்டிருந்தால்) இதெல்லாம் தேவையா...? எல்லாரும் அரசியல்ல இருக்கும்போது ஒருத்தர் மட்டுந்தான் கேள்வி கேக்க முடியற நிலையா/ ஏற்கனவே இதே ஸ்டைல்ல பதவி விலகற பிரச்னையை ஆரம்பிச்சு அது எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்தத பாத்தும் இப்டி உள்குத்து வச்சுக்கலாமா?
அப்புறம்...பேசாம மக்கள்ல ஒருத்தரே இப்டி ஏதாவது அப்பப்ப பண்ணினா எதிர் கட்சிக்காரன் தான் பண்ணினான்னு ஒவ்வொரு கட்சியும் ஆள் வச்சு மக்களுக்கு நல்லது பண்ண மாட்டாங்க? (மாட்டாங்க!) இத ஒரு ப்ளானா ஹீரோ செயல்படுத்தி முதல்வராகிற கதைக்கு ஆயுள் தடை விதிக்கிறேன் (அட்லீஸ்ட் என் ஆயுள் வரை)
Thursday, April 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கருணாநிதியை பொதுஜனம் கேட்ட கேள்வி நடுநிலை நாளிதழான தினகரனில் வெளிவந்ததோ?
இல்ல அது தினகரன்ல வர்ல தினமலர்ல வந்தது (அல்லது எனக்கு தெரியல.வைகோவ கேள்வி கேட்டது தினகரன்ல வந்தது
Post a Comment