Sunday, April 16, 2006

போலீஸ் எப்போது திருந்துவார்கள்

சமீபத்தில் நாமக்கல்லில் இருக்கும் ஒரே ஒரு சிக்னலில் நின்றபோது சென்னை ஞாபகம் வந்தது.வெள்ளுடை வேந்தர்களும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.முதல் கூத்து: ஸ்பென்சர் பிளாசா அருகில் ஒரு ட்ராபிக் போலீஸ் வரிசையாக வண்டிகளை கப்பம் கட்ட நிறுத்திக் கொண்டிருந்தார் எங்கள் வண்டியை நிறுத்தி "ம்ம் எடுங்க" என்றார்.என் நண்பன் அவர் பல்ஸ் உணர்ந்தவனாக டிரைவிங் லைஸன்ஸ் எடுக்காமல் 50 ரூபாய் எடுத்தான்.அவர் "ஓகே சார் நீங்க போலாம்" என்றதோடு நில்லாமல் பக்கத்தில் பணம் தர முடியாது என போராடுபவனை பார்த்து "பாருய்யா வந்தாரு 100 ரூபா குடுத்தாரு போறாரு நீ என்னடான்னா..." அவனை நம்ப வைக்க மறுபடியும்,"100 ரூபா தானே ஸார் தந்தீங்க?" "ஹி ஹி ஆமா"

ரெண்டாவது கூத்து: தி. நகர் சிக்னல் அருகே வழக்கம் போல வசூல் வேட்டை என் நண்பன் மாட்ட அப்போது பார்த்து அவனிடம் பணமில்லை,"சார் பணமில்ல சார் நாளைக்கு தரேன் சார்" "தோடா டிரைவிங் லைசன்ஸ் குடுத்துட்டு நாளைக்கு வாங்கிக்க" "சார் ப்ளீஸ் சார்" கொஞ்ச நேரம் போராட அவர் மனமிறங்கி "சரி எவ்ளோ வெச்சிருக்க" "சில்லரை தான் சார்" "எடுய்யா" மொத்தமாக எட்டு ரூபாய் அல்பம் அப்புறம் தான் விட்டது இவன் அதை விட அல்பம் "சார் எல்லாம் தந்துட்டேன் தம்'முக்கு ஒரு ரெண்டு ரூபா தாங்களேன்"

மூன்றாவது கூத்து: உதயம் தியேட்டர் பக்கம் சடாரென வண்டி நிறுத்தப்பட அந்த கடமை தவறாத அதிகாரி ஒரு பேச்சுக்கு கூட வேறெதுவும் கேட்கவில்லை "50 ரூபா எடு" நம்மாளு கோபமா "போன சிக்னல்ல இப்ப தான் சார் அழுதுட்டு வரேன்" என்று கதை விட்டான் "ஓ அவரு வாங்கிட்டாரா இன்னிக்கு வாங்கக்கூடாதே சரி சரி கிளம்பு"

2 comments:

Machi said...

நாமக்கலில் உள்ள காவலர்கள் ரொம்ப நல்லவங்களா? இல்லை ஒரே சிக்னல் உள்ளது தான் காரணமா? :-)

Thats Secret said...

அய்யய்யோ இங்கயும் வெள்ளிக்கிழமை வசூல் வேட்டை உண்டு மற்றபடி ரெண்டாவது சொன்னது தான் "ஒரே ஒரு சிக்னல்"