Sunday, April 23, 2006

சேவைக்குறைபாடு

நேற்று செல்பேசி ரீசார்ஜ் செய்ய டாப் அப் கார்டு வாங்கினேன், ரீசார்ஜ் செய்தால் "other error" என்றது, நான் சந்தேகப்பட்டது போலவே கடைக்காரர் கேட்டார்,"எந்த ஊர்ல சிம் வாங்கினீங்க?" "சென்னை" நாட்டாமை 'செல்லாது செல்லாது' என்பது போல விளக்கம் தந்தார்,"சென்னைல வாங்கினா ரீசார்ஜ் கூப்பனும் அங்க வாங்கணும் அது தான் வேலை செய்யும் தமிழ் நாட்டில வாங்கின கூப்பன் ஆகாது" என்றார்.யேய் என்னய்யா இது சென்னை வேற தமிழ் நாடு வேறங்கிற மாதிரியே பேசுறன்னு நினைச்சேன்.சரி ஒரு மாசம் டாக் டைம் இருக்கே அது வரை உபயோகிப்போம்னு சென்னையில் இருக்கும் நண்பனுக்கு பணம் போட ஐசிஐசிஐ பேங்க் போனேன்.

நண்பனிடம் அவன் பேங்க் அக்கவுண்ட் நம்பரும் பெற்றிருந்தேன், 12 மணியோடு மூடி விடுவார்கள் இன்னும் கால் மணி நேரமே இருக்கும் என்ற நிலையில் படிவம் நிரப்பி கொண்டு போய் தந்தால் "இது அக்கவுண்ட் நம்பரே இல்லை ஐசிஐசிஐயில் 15 இலக்கம் இருக்கும் பாருங்கள் 12 தான் இருக்கிறது" என்றார்."ஓ அப்படியா எனக்கு ஐசிஐசிஐ பத்தி தெரியாது, சரி கண்டிப்பா தெரியும் தானே இது தப்பான நம்பர்னு?" என்றேன், தலையை வித்தியாசமாக ஆட்டினார், அப்போதே டவுட் ஆனேன்...நான் நினைத்த மாதிரியே என் நண்பன் அப்புறம் (இரவு தான் லைன் கிடைத்தது) சொன்னான்,"டேய் அந்த 12 நம்பருக்கு முன்னாடி மூணு சைபர் சேக்கணும்டா பேங்க்லயே சொல்லுவாங்களே"

இந்தியாவில் கஸ்டமர் கேர் என்பதே அரிதான வார்த்தையாக இருக்கிறது, இங்கே கவனிக்க வேண்டியது என் பிரச்னையல்ல அதன் வீரியம் குறைவாகக்கூட இருக்கட்டும், அலட்சியம் தான் எனக்கு அதிருப்தியை தருகிறது.அதுவும் சில கெட்ட தினங்களில் இப்படி தொடர்ச்சியாக. தனிப்பட்ட முறையில் இனி வழக்குகள் போட்டு தாக்கப்போகிறேன் (அக்கா பி.எல் கடைசி வருடம் படிக்கிறார்...ஹி ஹி)

7 comments:

மாயவரத்தான் said...

ஹூம்.. என்னோட கதையே வேற. பி.எஸ்.என்.எல். டாப் அப் கார்டு வாங்கினேன். சென்னையில் வாங்கின சிம் கார்டுக்கு டாப் அப் எங்க ஊரிலே! நான் கேட்டதோ டாப்-அப் கார்டு. அங்கே கொடுத்ததோ ரீசார்ஜ் கார்டு! ஏற்கனவே 25 நாள் வேலிடிட்டி இருந்திச்சி. இப்போ 220 ரூபாய்க்கு வாங்கின கார்டிலே வெட்டியா 140 ரூபாய் தண்டமா போய்டிச்சி. எல்லாம் முடிஞ்ச அப்புறம் டாப் அப் கொடுக்காம ரீசார்ஜ் எதுக்கு கொடுத்தீங்க அப்படீன்னு கேட்டேன். நீங்க ஏன் அப்பவே வாங்கலைன்னு பதில்!

அடுத்த தடவை டாப் அப் (பார்த்து) வாங்கினேன். *111*18 digits number# அடிச்சு அனுப்பினா error அப்படீன்னு வந்திச்சு. திரும்ப திரும்ப அதையே கொடுத்துகிட்டே இருந்தேன். அதுவும் சளைக்காம அதே error வந்துகிட்டே இருந்திச்சி. ஒரு 10 தடவை டிரை பண்ணின அப்புறம் என்னோட பிரெண்டு ஒருத்தனுக்கு போன் பண்ணி கேட்டேன். (customer care helpline ரொம்ப பிஸி!). அவனோ, அதிலே அப்படி தான் error வரும். நீ 123 அடிச்சு பாரு. டாப் அப் ஆகிருக்கும். அப்படீன்னான். பார்த்தேன். அதே மாதிரி தான் ஆகியிருந்துச்சு!

(அது சரி.. ஸ்பீடு போஸ்ட்டுன்னு சொல்லி காசு வாங்கிட்டு 5 நாள் அப்புறம் சென்னையிலிருந்து எங்க ஊருக்கு ஒரு தபால் கொண்டு வந்து கொடுத்தாங்க! ஸ்பீடு போஸ்டு இல்லாம நார்மல் போஸ்டிலே அதுவே 3 நாளிலே வந்திடும். இதுக்கு உங்க அக்காகிட்ட சொல்லி எதுவும் கேஸ் போட சொல்ல முடியுமா சாரே?!)

dondu(#11168674346665545885) said...

டாப் அப் கார்டை விற்கும்போது கடைக்காரர் உங்களிடம் கேட்டிருக்க வேண்டும் எங்கு சிம் கார்ட வாங்கினீர்கள் என்று. அதை அவர் வேண்டுமென்றே செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது.

ஒன்று செய்யுங்கள் எந்தக் கடையில் எந்த ஊரில் என்ற விவரங்களையெல்லாம் உங்கள் வலைப்பூவில் பதியுங்கள். முடிந்தால் கடைக்காரரின் பெயரையும் எழுதவும். அவ்வாறு பலர் செய்தாலே ஏதாவது நல்லது நடக்கும். வலைப்பூக்களின் பலத்தை உபயோகப் படுத்திக் கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Thats Secret said...

ராகவன் அவர்களே நான் கடைக்காரரை குற்றம் சொல்லவில்லை ஏர்செல்லை சொல்கிறேன், சென்னை சிம் கார்டுக்கு தமிழ்நாட்டில் ரீசார்ஜ் கூப்பன் வாங்கி உபயோகிக்க முடியாது எந்த ஊரானால் என்ன?

அய்யய்யோ மாயவரத்தான் நண்பரின் கதைக்கு நான் பரவாயில்லப்பா ஆஹா நான் கேக்குற கேள்விக்கே அக்கா ஒழுங்கா பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க... என்ன ஆனாலும் கண்டிப்பா வழக்கு போடறோம் ஓகே?

dondu(#11168674346665545885) said...

You seem to be very innocent Gokul Kumar. Tulasi madam too faced the same problem, I recall. The shopkeeper is bound to know about this and it is in his own interest to warn the potential customer about this possibility.

The other day I went to the Hutch outlet intending to change the battery to my mobile. I told him that the volume is very feeble and I suspect the battery to be in need of replacement. He just checked the volume setting and told me that it has been set very low. He adjusted the volume and there is no trouble since then. Do you think that I would hereafter go elsewhere?

If on the other hand he just sold the battery to me and afterwards the volume setting matter comes to light and on my querying he just replies that it is my fault, do you think I will hereafter go to him?

Regards,
N.Raghavan

Thats Secret said...

May be am innocent & thanks for that compliment Ragavan, I can understand what you say.

What I intended in that article is "Aircel" divided tamilnadu & Chennai.They (whatever may be their prblm) are telling I have to buy a new simcard if i am transferring from chennai to tamil nadu...Am asking Y I have to...? Am not transferring frm Bangalore to TN.They are not giving proper service within a state itself.I believe now u can undrstnd Whom Am saying 'bad', not the shopkeeper but Aircel, It should change system to enable service as one state not dividing chennai as an island.

துளசி கோபால் said...

நான் ஏர்டெல்க்கு சென்னையிலே வாங்குன சிம் கார்டுக்கு பெங்களூருலே ரீசார்ஜ் வாங்கிட்டு
அது டாப் அப் பண்ணாம சதி செஞ்சபிறகுதான் கடைக்காரர் சொன்னார், சென்னைக்கு வேற டைப்
ரீ சார்ஜ் கார்டு இருக்காம். 300 ரூபாய் தண்டமாச்சு.

Mani said...

உங்க கதை எவ்வளவோ பரவாயில்லை. நான் சொல்லுறதை கொஞ்சம் கேளுங்க. நான் BSNL 551 Rs கார்ட் வாங்கினேன். நம்பரை சொரண்டும் போது ஒரு சில நம்பர்கள் சரியாக தெரியவில்லை. அதை பார்த்த கடைக்காரர் மொத்தமாக சொரண்டி எல்லா நம்பர்களும் தெரியாத மாதிரி பண்ணிட்டார். Customer Care அலுவலகத்திலும் இதற்கு சரியான பதில் இல்லை. மொத்தத்தில் 550 ரூபாய் நஷ்டப்பட்டதுதான் மிச்சம்.