Monday, April 03, 2006

ரயில் ரிசர்வேஷன் கட்டண உயர்வு யாருக்கும் தெரியுமா

சுமார் மூன்று நாட்களுக்கு முன் தினத்தந்தியில் நான் படித்த செய்தி இது
புறப்படும் இடத்தை தவிர வேறெங்கு இருந்து ரிசர்வ் செய்தாலும் முப்பது ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படும்.அதாவது சென்னையிலிருந்து மதுரை செல்ல மதுரையில் ரிசர்வ் செய்தீர்களானால் முப்பது ரூபாய் அதிகம் தர வேண்டும்.ஆனால் சென்னையிலேயே செய்தால் இக்கட்டணம் இல்லை (குழப்பவில்லையே...?) .இது நடைமுறைக்கு வந்து விட்டதா என்று எதுவும் தெரியவில்லை,உங்களுக்கு காட்ட தினத்தந்தி மின்னிதழில் தேடினேன் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை .நீங்கள் கண்டு பிடித்தால் கமெண்ட்டில் இடலாம்.
இது நிறைய குழப்புகிறது
1.ரிட்டர்ன் டிக்கட் எடுத்தாலும் இக்கட்டணம் தரவேண்டும் என்பது நியாயமா
2.என் ஊர் நாமக்கல் அங்கிருக்கும் ரிசர்வேஷன் கவுண்ட்டரில் எந்த ஊருக்கு பதிவு செய்தாலும் இக்கட்டணம் தந்து தொலைக்க வேண்டுமா
3.இன்டர் நெட்டில் பதிவு செய்தாலும் தரவேண்டுமா (இன்டர் நெட்டில் எங்கிருந்து பண்ணினால் என்ன? இல்லை சின்சியராக ஐ பி அட்ரெஸ் நோட் பண்ணுவார்களா?)

1 comment:

Dr.Srishiv said...

இணையதளம் மூலம் பதிவு செய்தால், பதிவுகட்டணமாக 40 ரூபாய்கள் அதிகம் பிடித்துக்கொள்கின்றனர் ஐயா, சமீபத்தில் நான் புதுதில்லி சென்று திரும்பியது இணையத்தில் பதிந்தே...ஆனால் ஒரு வசதி, 3,4 மணிநேரம் தொடர்வண்டிநிலைய பதிவகத்தின் வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லை, உட்கார்ந்த இடத்தில் பதிந்துகொள்ளலாம்..
ஸ்ரீஷிவ்..