அட ஆமாங்கறேன் இன்னிக்கு காலைல பேப்பர தெறந்தா சிம்ரன் அதிமுகவுக்கு ஆதரவுன்னு போட்டிருக்கு,திமுக என்னன்னா கலர் கலரா கத விடுறாங்க,நாம என்ன சொன்னாலும் வேற வழியில்ல இந்த ஜனங்களுக்குன்னு நினைக்கிறாங்க போல...
வேண்ணா பாருங்க இந்த தடவை விஜய காந்த் ஒரு கலக்கு கலக்க போறாரு
முதல் நல்ல விஷயம் மத்த கட்சிகளை விட நட்சத்திரக் கூட்டம் அங்க கம்மி தான்.கம்மி என்ன அவரு மட்டுந்தான்.இப்பல்லாம் பரவாயில்லியப்பா, நல்லா தான் பேசுறாரு "பாவம்யா நாமளாவது போடுவோம்"ன்னு எல்லாரும் நினைச்சாலே சோலி முடிஞ்சுது.
அதே மாதிரி சன் நியூஸ்ல வைகோ ஒரு குடும்பம் எல்லா மீடியாவயும் ஆக்ரமித்திருக்கிறதுன்னதுக்கு பதிலடியா ஒவ்வொரு பத்திரிக்கையும்,அரசியல் வாதியும் வச்சிருக்கிற மீடியா கம்பெனிகள காட்டுச்சு தெரிஞ்ச விஷயம் ரெண்டு...எல்லாரும் தப்பு பண்றான் நானும் பண்றேன்கிற கடுப்பேத்தற மனோ பாவம், அடுத்தது ஆமண்ணே எல்லாரும் ஃபிராடுப்பயலுவ தான்.இப்டி குறை சொல்றேன்னு உண்மைய உடைச்சிக்கிட்டிருக்கானுவ கடைசில இருக்கிறதிலயே நல்லவரு கேப்டன் தான்னு தனிப்பெரும்பான்மை கிடைக்கப் போகுது இல்லாட்டியும் கூட கூட்டணி ஆட்சி அமைக்கவாச்சும் வாய்ப்பு கிடைக்கப்போகுது
குறிப்பு: நேற்று இங்கே எழுதியதற்கு பிராயச்சித்தமாகவோ அவர்கள் கட்சியில் போன் வந்தது என்றோ இப்படி எழுதுகிறேன் என தவறாக நினைக்க வேண்டாம் ஹி ஹி
Saturday, April 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சன் டிவி பட்டியலிட்டவர்களில் பலர் பரம்பரை பரம்பரையாக வியாபாரம் செய்து சம்பாதித்தவர்கள்.
மஞ்சப்பையோடு சினிமாவுக்கு கதை எழுத வந்து, பின்னர் அரசியலில் இறங்கி சம்பாதித்து பில்லியனராக மாறியவர்கள் இல்லை.
இது எப்போ தான் மக்களுக்கு புரிய போகுதோ..
You are absolutely correct!
There are people who support such activities by these two kazhagams who think that TN is their sole property and no one should have any questuionsd.
Pl. also see my post in 'podhujanam's thread!
http://arasiyal.blogspot.com/2006/04/blog-post.html#c114387045063399847
http://aaththigam.blogspot.com
சன் டீவியில் காட்டிய உதாரணங்களில் யாரும் அரசியலில் இருப்பவர்களாகத் தெரியவில்லை.
சன் டீவியின் அந்தச் செய்திகளின் பலன் ஒன்றே ஒன்று தான். யார் யார் எந்தப் பிசினஸ் பண்றாங்க என்ற பொது அறிவு வளர்ந்ததுதான்.
இன்னும் கொஞ்ச நாளில் 'அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்' என்று சொன்னாலும் சொல்வார்கள்.
இல்லை மகேஸ் ஜெயா டிவி காட்டினார்கள் பாமக கூட்டணி கட்சி என்பதால் காட்டாமல் இருந்திருக்கலாம்
Post a Comment