Tuesday, February 14, 2006

உங்களுக்கு தள்ளிப்போடும் குணமுள்ளதா?

ஆங்கிலத்தில் ப்ரோக்ராஸ்டினேஷன் எனப்படும் இந்த தள்ளிப்போடும் பழக்கம் தான் வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.பின்வரும் கேள்விகளுக்கு நெகடிவ் பதில் சொல்கிறீர்களா என செக் செய்து கொள்ளவும்:
கடைசி பத்து டெட்லைன் சம்பந்தபட்ட விஷயங்களை எப்போது முடித்தீர்கள்? அல்லது எத்தனை முடிக்காமல் விட்டீர்கள்? அதாவது தீபாவளீக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்கு துணியெடுப்பது, கரென்ட் பில், டெலெபோன் பில் அபராதத்துடன் கட்டுவது மாதிரி.

ஒருவேளை நீங்கள் மது அருந்துபவராக இருந்தால் பார்ட்டிகளில் உங்களோடு இருக்கும் எல்லோரையும் விட அதிகமாக குடித்தீர்களா? இல்லையென்றால் அப்படி யார் குடித்தார்களோ அவர்களுடன் கவனமாக பழகவும்.ஏனென்றால் இந்த பழக்கம் உள்ளவர்கள் அதிகம் குடிப்பார்கள் என்று சைக்கலாஜிகல் டுடே பத்திரிக்கை கூறுகிறது.

”இன்றை விட நாளை இந்த வேலையை நன்றாக செய்வேன்” “இது முக்கியமானதல்ல” என்பது போன்ற வரிகளை உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக்கொள்வதுண்டா என கவனியுங்கள். அதே போல் “ நான் நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக செயல்படுவேன்” என கூறுபவரா? (இன்டர்வியூவில் இதை பிளஸ் பாயின்டாக சொல்வதை தவிர்ப்பது நலம்.)

இரண்டிலிருந்து நான்கு வருடங்களாக மிகப்பெரிய மாற்றம் எதையும் சந்திக்கவில்லையா? எவ்வளவு வேலை இருந்தாலும் மெயில் ஒன்று வந்தால் பார்த்து விட்டு தான் மறுவேலை.

இவற்றில் எந்த கேள்விக்கு ஆமாம் என்று சொல்லியிருந்தாலும் எச்சரிக்கை...தள்ளிப்போடும் பழக்கம் தான் வெற்றியை தவிர்க்க மிக சுலபமான வழி

4 comments:

யாத்ரீகன் said...

ஆமாங்க.. அனுபவபூர்வமா.. நிறையதடவை பட்டிருக்கின்றேன்... முடிந்தவரை இந்த தள்ளிப்போடும் முடிவை தள்ளிப்போட்டிருக்கொண்டிருக்கின்றேன்....

Thats Secret said...

ஆஹா அருமை

Mahamaya said...

இந்தத் தள்ளிவிட இயலாத தள்ளிப் போடும் பலவீனத்தப் பற்றி நான் ஒரு பதிவு இட்டிருக்கிறேன் (ஆங்கிலத்தில்). அதன் உரல் இதோ:

ஸைபர் ப்ரம்மா

நன்றி

எஸ்.கே

Boston Bala said...

Good post... the rest are @ http://www.psychologytoday.com/rss/pto-20030823-000001.html