தமிழ் சினிமா என்று தனிமைப்படுத்தக்கூடாது, தேசிய அளவிலேயே நம்முடைய லாஜிக் மீறல்கள் அதிகம் அதுவும் சினிமா என்பதை தாண்டி சீரியல்,விளம்பரங்கள் வரை ஒரே காமெடி தான்.நானும் என் மாமாவும் (அதிசயமாக) பொதிகை சேனலை பார்த்துக் கொண்டிருந்தோம், அதில் ஒரு விளம்பரம், டாக்டர் சொல்கிறார் "நீங்க அப்பாவாயிட்டீங்க" உடனே அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் "ஆ நிஜமாவா" அடப்பாவிகளா என்னய்யா எxபிரஷன் இது.
அதாவது ஹீரோ நூறு பேரை அடிப்பதை எல்லாம் தாண்டி சின்ன விஷயமும் எனக்கு உறுத்தும்.சிறு வயதில் படம் பார்க்கும்போது ஹீரோ ஹீரோயின் பின்னாலேயே சுற்றுவார் அப்போதெல்லாம் இவர் வேலைக்கே போகாமல் சாப்பாட்டுக்கு என்ன செய்வார் என்று நினைப்பேன்.அதே போல கல்யாண மேடையில் மணமகள் புரட்சியாக கல்யாணத்தை நிறுத்துவது, அப்புறம் நிச்சயமான சில தினங்களில் கல்யாணத்துக்கு வந்த (?!) வேறு யாரோ ஒருவரை காதலிப்பது இதெல்லாமே நான் பார்த்ததேயில்லை (அரிதாக செய்தித்தாள்களில் கேள்விப்பட்டிருக்கிறேன்)
அப்புறம் சாதியை எதிர்த்து ஹீரோ பேசும் வசனங்கள் அடப்போப்பா எங்கே ஜாதி இல்ல? திருமணம் முதல் அரசியல் வரை, வலைப்பூக்கள் முதல் டீக்கடை பெயர் வரை எல்லா இடங்களிலும் ஜாதி இருக்கத்தான் செய்கிறது ஏதோ இளைஞர்கள் ஜாதியை அறவே வெறுப்பது போல காட்டுவது... இளைஞர்கள் (ஜாதி பற்றி பேச விரும்பாத நண்பர்களை தவிர்த்து விட்டு) தங்களுக்குள் வெகு சாதாரணமாக ஜாதி பற்றி பேசுவதையும் சில ஜாதிகளை திட்டுவதையும் கண்டிருக்கிறேன்.தங்கள் ஜாதியில் வரதட்சிணை எவ்வளவு வாங்குவார்கள் என்பது பற்றி கூட அரட்டை நீளும்.
என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய லாஜிக் மீறல் நிகழ்கிறதென்றால் அது காதலில் தான் பஸ் ஸ்டேண்டிலோ ஏதோ ஒரு கூட்ட நெரிசலான இடத்திலோ பார்க்கிற பெண்ணை அடுத்தடுத்து எப்படி தான் இவர்களால் மட்டும் மீட் பண்ண முடிகிறது? நானும் சென்னையில் எத்தனையோ முறை ட்ரை செய்திருக்கிறேன் 99% ஒரு முறை பார்த்த பெண்ணை மறுமுறை பார்ப்பதரிது.
அப்புறம் மீறிப்போனால் இரண்டே இரண்டு பெண்களைத்தான் ஹீரோ காதலித்திருப்பாராம் (என்ன கொடும சரவணன்?) அதே போல ஹீரோயின் ஒரே ஒருவரைத்தான்.நாமெல்லாம் கணக்கு போட்டா அஞ்சாறு ஆட்டோகிராப் தாண்டுமே
சரி இதக்கூட ஒத்துக்கலாம்யா ஹீரோயினம்மா நம்ம ஹீரோவோட சில பல திறமைகள்ல மயங்கி ப்ரபோஸ் பண்ணுவாங்களாம்.யேயப்பா தமிழ்நாட்டுல எந்த ஊர்லயா நடக்குது இந்த அதிசயம்? நானெல்லாம் கேள்விப்பட்டதே இல்லப்பா அப்டியே நடந்தெல்லாம் அது சப்ப ஃபிகரா இருக்கும் அது கூட ப்ரபோஸ்லாம் பண்ணாது பண்ணினா இவரு ஒகே சொல்ல மாட்டாருன்னு பட்டுன்னு வீட்ல சொல்லி சொந்தத்துல கல்யாணம் முடிச்சிடும்.
அடுத்தது ஹீரோயினோட ட்ரெஸ் (இதுல லாஜிக் மீறல நானும் சில நண்பர்களும் காட்சிக்கு அவசியம் எனில் வைத்துக்கொள்வதில் தவறில்லை என ஒப்புக்கொள்கிறோம் என்றாலும் ;) நிஜத்தில் தமிழ்பெண்கள் அப்படி ட்ரெஸ் பண்ணுகிறார்களா? சென்னை வந்து பார்த்தாலும் அப்படி உடுத்துபவர்கள் எல்லாம் வட நாட்டு பெண்கள் தானே தவிர தமிழ் பெண்கள் மிகக்குறைவே.(அந்த சில நண்பர்கள் கமெண்ட்டில் கை தூக்கவும்)
ஆங்கிலப்படங்களிலும் லாஜிக் மீறல்கள் உண்டு இது இண்டர்நேஷனல் பிரச்னை தான் ஆனால் இதற்கு காரணம் எப்போதும் ரியாலிட்டியோடு வாழும் நமக்கு எண்டர்டைன்மெண்ட் கற்பனையானதாக இருப்பது ஒரு மாறுதல் தரும் என்ற லாஜிக் ஆக இருக்கலாம்.அங்கேயும் ரியாலிட்டியே இருந்தால் எதற்கு தியேட்டர் வரவேண்டும்?
வெகுசில படங்கள் ஈரானிய ஆங்கில டாகுமெண்டரி போல வருவதும் ஹிட்டாவதுமாக இருந்தாலும் "சுத்தமான உணவு எங்கள் சிறப்பம்சம்" என்று சில விடுதிகளில் எழுதியிருப்பார்கள் சுத்தமான உணவு சிறப்பம்சமல்ல அத்தியாவசியத் தேவை அது போல ரியாலிட்டியோடு படம் வருவது ஒரு சிறப்பம்சம் போல விளம்பரப்படுத்தப்படுகிறது வேறு வழி பார்ப்போம் ;)
Monday, May 15, 2006
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//நானெல்லாம் கேள்விப்பட்டதே இல்லப்பா அப்டியே நடந்தெல்லாம் அது சப்ப ஃபிகரா இருக்கும்//
அது என்னங்க "சப்ப ஃபிகர்". உருவத்தை பட்டும் வைத்து comment அடிக்காதீர்கள் நண்பரே. Super figure எல்லாம் நல்ல character உடையவர்களா என்ன?
ஸாரி பாஸ் நியாயம் தான் ப்ராக்டிகலாக பேசினால் கேரக்டரெல்லாம் இரண்டாம் பட்சம் தான் (சரி உங்களுக்கு இல்லை என்னை மாதிரி ஆட்களுக்கு)உண்மையா இல்லையா? மட்டுமில்லாமல் பெண்களை மட்டுமே இப்படி பேசுகிறார்கள் என எண்ண வேண்டாம் இதில் நியாய அநியாயமெல்லாம் பேசவில்லை
super figuire என்று கேரக்டரையா குறிப்பிட்டீர்கள்? (இயல்பாகவே அது தோற்றத்திற்கு என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது நீங்கள் எனக்கு விளக்குவதற்கு சொல்லியிருந்தாலும்)
comment எதும் அடிக்கவில்லை "அவ பாலுவுக்கு சுமார் தான் அவன் ஜோதிக்கு சுமார் தான்" என சாதாரணமாகவே பேச்சு வழக்கில் உபயோகிப்பது தான்
அது உங்கள் கருத்து அதை நான் மதிக்கிறேன்
கதாநாயகன் ஒரே துப்பாக்கி குண்டில் வில்லனின் பெரிய ஜீப்பை கவிழ்ப்பது, சக்திவாய்ந்த ஏகே 47 போன்ற ஆயுதங்களின் தொடர் உமிழ்தலிலிருந்து ஒரு காயம் கூட படாமல் (கதாநாயகன்) தப்பிப்பது, கிளைமாக்ஸில் எத்தனைமுறை வண்டி கவிழ்ந்தாலும் சோப்ளாங்கி கதாநாயகன் சிறு அடிகூட படாமல் எழுந்து நிற்பது, பலசாலி வில்லன் கீரோவை அத்தனை தடவை அடி அடி என எழுந்திருக்கக்கூட முடியாதபடி அடித்துப்போட்டிருக்கும்போது, கடைசி நிமிடத்தில், கதாநாயகியின் கூக்குரலை கேட்டதும், திடீர் வீரமும், வானத்திலிருந்து(?) பலமும் வந்து வில்லனை செம்மு செம்முனு செம்முவது...
இதையெல்லாம் விட்டுட்டு, என்னா பேச்சு இது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு....
எனக்கு இரண்டு நண்பர்கள் ஞாபகத்துக்கு வருகின்றனர். கோபு-பாபு என்று வைத்துக் கொள்வோமே.
கோபு: பாபு எனக்கு ஒரு பிரச்சினைடா.
பாபு: என்ன விஷயம் சொல்லு, நான் தீர்த்து வக்கறேன்.
கோபு: என்னை ஒரு பணக்காரப் பெண்ணும் ஏழை பெண்ணும் காதலிக்கறாங்க. நான் முதல்ல ஏழை பெண்ணத்தான் காதலிச்சேன், ஆனால் இப்போ இந்த பணக்காரப் பெண் வேற வந்துருக்கா, என்ன செய்யறதுன்னு தெரியல, தல.
பாபு: டேய், நீ உண்மையான ஆண்பிள்ளதானே, ஒரு பொண்ண காதலிப்ப, அப்புறம் அவளை மறந்துட்டு ஒரு பணக்காரிய காதலிக்கப் போறயா? அப்படி செஞ்சால் கண்ணாடில ஒன் மொகத்த ஒன்னால பாத்துக்க முடியும்னு நினைக்கிற?
கோபு: நீ சொல்லறது சரிதாண்டா, நான் ஏழை பெண்ணையே கட்ட்க்கறேன். ரொம்ப நன்றிடா.
பாபு: சரி, சரி, அந்த பணக்காரப் பொண்ணோட பேரு அட்ரஸ் எல்லாம் கொடுத்துட்டுப் போ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கார்த்திகேயன் இதற்கே பதிவின் நீளம் மிக அதிகமாகிவிட்டது (உங்கள் கமெண்ட்டே ஒரு பாரா) , மற்றும் ஏதாவது ஒரு படத்தை உதாரணம் வைத்து யோசித்தால் புத்தகமே போடலாம்
Post a Comment