சமீபத்தில் எனக்கு நிறைய உணர்ச்சி வசப்பட்ட நண்பர்கள் லோக் பரித்ரனுக்கு ஓட்டு போட சொல்லும் எஸ்எம்எஸ்ஸை அனுப்பியிருந்தார்கள்... நான் சென்னைவாசியல்ல என்பதை மறந்த என் சென்னை நண்பர்கள்.நாமக்கல்லில் போட்டியிடவில்லை என நினைக்கிறேன்.நேற்று என் சென்னை தோழியும் தான் இக்கட்சிக்கு தான் ஓட்டு போட போவதாக தெரிவித்தாள், "நீ முதலில் ஓட்டு போட போவியா" என்றேன்.
இளைஞர்கள் ஆதரவு இருக்கலாம், ஆனால் இளைஞர்கள் இதிலெல்லாம் ஆர்வம் காட்டுவது போல தெரியவில்லை.இளைஞர் எழுச்சியெல்லாம் ஓல்டு ஃபேஷனாகி விட்டது, இதில் நல்ல விஷயம் மொழி,மதப்பிரிவினைவாதங்களுக்கு இன்றைய சமுதாயம் அடிமையாவதில்லை, யாராவது அப்படி தூண்டினால் கூட எஸ்எம்எஸ் கடி ஜோக் போல சிரித்து விட்டு விலகி போகிறார்கள்.
வயதனவர்களை,பெண்களை ஈர்க்க இது பத்தாது.என்ன தான் நகரம் என்றாலும் அங்கும் நடுத்தர,ஏழை மக்கள் தான் ஓட்டு நிர்ணயிப்பவர்கள் முக்கியமாக ஏழைகளுக்கு ஐஐடியில் படித்து விட்டு வந்திருக்கிறார்கள் என்பதை என்ன சொல்லி புரிய வைப்பார்கள்?
அது மட்டுமின்றி ஏதோ தேர்தலுக்காகவே திடீரென்று புறப்பட்ட மாதிரியல்லவா இருக்கிறது? ஒருவேளை கட்சி சார் பத்திரிக்கைகளின் இருட்டடிப்பு கூட இதற்கு காரணமாக இருக்கலாம், ஆனால் இந்த இருட்டடிப்பையே சமாளிக்க முடியாதவர்கள் பதவியில் பிரச்னைகளை எப்படி சமாளிக்க முடியும்? (நான் எந்த பத்திரிக்கையிலும் இவை பற்றிய செய்திகள், பிரச்சாரங்கள், பேட்டிகள் படித்ததாக ஞாபகமில்லை)
கடைசியாக ஒன்று மக்களுக்கு நல்லது செய்ய தேர்தலில் ஜெயிக்க நல்லவர்களாக இருப்பது மட்டும் போதாது, மார்கெட்டிங்கில் ஆரம்பித்து பொறுமை வரை நிறைய வேண்டும்.
Thursday, May 04, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
கோகுல் குமார்,
நீங்கள் நாமக்கல்லா!
நானும் இம்முறை லோக்பரித்ரான் நாமக்கல்லில் போட்டியிடவில்லை என்பதால் முதல் முறையாக 49 - ஓ வை பயன்படுத்தலாம் என்று உள்ளேன்!
லோக் பரித்ரன் எண்ணங்கள் புனிதமாயிருக்கலாம். ஆனால் 'இந்தியா ஒளிர்கிறது' போல நிதர்சனத்திலிருந்து மிக விலகிய பார்வைகள். முதலில் அடித்தட்டு மக்களுடன் பழகி அரசியலுக்கு வர வேண்டும்.
Top economists/ Technocrats are poor politicians. :(
Top economists/ Technocrats are poor politicians. :(
I can't accept this.
the hindu ஆங்கில பத்திரிக்கையில் கட்டம் கட்டி மூன்று முறை, தினமலர், தினமணி (நான் படித்தது இந்த மூன்றுதான்) போன்ற நாளிதழ்களிலும், ஒரு சில வாரப் பத்திரிகைகளிலும் லோக்பரித்ரண் பற்றி வந்துள்ளது.
ரைஸ்மில் வேலையில் ஆரம்பித்து சினிமாவி புகுந்து இன்று கட்சி ஆரம்பிப்பவரும், தன்னைத் தானே, கீழ்ஜாதி ஆனால், தமிழ் அறிஞர் எனக்கூறிக்கொண்டு, (எந்த தொழில் செய்தார் தெரியவில்லை ஆனால் ஆசியாவிலேயே, 4th richest Indian) 10 வகுப்பு கூட பாஸாகாமல் டாக்டர் போட்டுக்கொள்பவரும், சர்ச்பார்க்கில் படித்ததையே பெரிய ஆக்ஸ்போர்டில் படித்திதுபோல் கூறிக்கொள்ளும் அம்மையார்களையும் விட, 2 லட்சம் மாச சம்பளத்தை உதறிவிட்டு தைரியமாக அரசியல் சாக்கடையில் கால் வைத்த I.I.T காரர்களுக்கு நிச்சயமாக ஓ என்ன ஓஹோ போடலாம். சிறிய ஓட்டை மூலம் கூட வெளிச்சம் பரப்பலாம். பெரு வெற்றி அடைய, மக்கள் இனம் காண காலம், நேரம் எடுக்கும். அதை இவர்கள் நன்கு உணர்ந்ததனால்தான், ஒரு சில தொகுதி மட்டும் நிற்கிறார்கள்.
//லட்சம் மாச சம்பளத்தை உதறிவிட்டு தைரியமாக அரசியல் சாக்கடையில் கால் வைத்த I.I.T காரர்களுக்கு நிச்சயமாக ஓ என்ன ஓஹோ போடலாம். சிறிய ஓட்டை மூலம் கூட வெளிச்சம் பரப்பலாம். பெரு வெற்றி அடைய, மக்கள் இனம் காண காலம், நேரம் எடுக்கும். அதை இவர்கள் நன்கு உணர்ந்ததனால்தான், ஒரு சில தொகுதி மட்டும் நிற்கிறார்கள்.
//
உண்மைதான் சந்திரசேகர். உங்கள் கருத்துகளில் நானும் உடன்படுகிறேன்.
"லோக் பரித்ரன் வெல்லுமா?"
ஏதோ பெயரை ஞாபகம் வைத்து ஒரு பதிவு போட்டிருக்கிறீர்களே, அதுவே அவர்களுக்கு வெற்றிதான்.
Post a Comment