Monday, May 01, 2006

தேர்தல் 2060

02/05/2060
காலை கொஞ்சம் லேட்டாக தான் எழுந்தான் ராமசாமி என்கிற அந்த இளைஞன் வெளியே பெருங்குரலில் மைக் சத்தம் கேட்டது,குடிசையிலிருந்து வெளியே வந்து பார்த்தான்.கையில் மஞ்சள் நோட்டீஸை ஒரு கரை வேட்டி திணித்தது.அவனுக்கு தெரியும் நகரத்தில் பிரசாரம் வேறு மாதிரியும் கிராமங்களில் வேறு மாதிரியும் செய்யப்படுகிறது,அங்கே டிஜிட்டல் பேனர் இங்கே மஞ்சள் நோட்டீஸ்.முன்பொரு காலத்தில் கருணாநிதி என்கிற தலைவர் "கிராமங்களில் லேட்டஸ்ட் டெக்னாலஜி வாயிலான பிரச்சாரங்களில் ஈடுபடாதீர்கள் நம்மை பணக்கார கட்சி என்று நினைத்து விட வாய்ப்புள்ளது" என்று சொன்னதை மக்கள் மறந்தாலும் எல்லா கட்சிகளும் மறப்பதில்லை.

நோட்டீஸில் பார்வையை ஓட்டினான், காவிரி நதி நீர் 738 ஆவது ஆணையம் அமைக்கப்பட்டு கண்டிப்பாக விவசாயிகளின் துயர் துடைக்கப்படும்.வீட்டுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும்.சடாரென ஒரு தலைவர் வாழ்நாள் முழுதும் இலவச அரிசி வழங்கப்படும் என்றதும் இன்னொரு தலைவர் அரிசி மட்டுந்தானா நாங்கள் சமைக்க தேவையான குக்கர் முதல் மசாலா வரை வழங்குவோம் என்றதும் அவன் நினைவுக்கு வந்தது.

தமிழ் வழிக்கல்வி கட்டாயமாக்கப்படும்...பெரிதாக சிரித்தான் எதற்கு எந்த வேலைக்கும் போகாமல் இருக்கவா? இவன் கல்லூரியில் படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலை பார்க்கிறான் பீஸா டெலிவரி பாயாக.இதே ஆங்கிலம் சரளமென்றால் இன்னும் நல்ல நிலைமை தரும் கால் சென்டர்,பிபிஓ வில் சேர்ந்திருப்பான்.இவன் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தான் அப்புறமும் நல்ல மார்க் தான் ஓரளவு நடுத்தர குடும்பமாக இருந்திருந்தால் பெரிய படிப்பு சேர்ந்திருக்க முடியும், ஏழை நல்ல படிப்பில் சேர வகுப்பில் முதல் மாணவனாக அல்ல மாநிலத்தில் முதல் மாணவனாக வர வேண்டும் என அவன் அறிவான்,அந்தளவுக்கு அவன் அறிவாளி அல்லன்.

அப்போதிருந்து இப்போது வரை தீர்க்க வேண்டிய பிரச்னைகள் நிறைய உண்டு, இப்போது வரை மின் இணைப்புகள் தரை கீழ் இணைப்பு தர வேண்டும் என்று எந்த கட்சியும் கூறவில்லை.இதனால் எவ்வளவு உயிரிழப்பு? மழை வந்தால் ஒரே நாளில் ஊருக்குள் வெள்ளம், அதில் மின்சாரம் தாக்கி சில பல உயிர் இழப்புகள்.அதற்கான உள்கட்டமைப்புகளை சரி செய்ய யாரும் வாக்குறுதி தரவில்லை.பொறியியல்,மருத்துவ படிப்புகளுக்கான கட்டணங்கள் மலைக்க வைக்கின்றன, அதை குறைக்க யாரும் முயற்சிக்கவில்லை.அரசாங்க வேலை வாய்ப்பு எட்டாக்கனி, வெளி நாட்டு கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அவர்களுக்கும் சரியான ஒத்துழைப்பு இல்லாமல் மற்ற மாநிலம் தேடி செல்கிறார்கள்,சுய தொழில் புரிய
விரும்புவோருக்கு உடனடி வங்கி கடன்,புற்றீசல் போல கல்லூரிகளுக்கு அனுமதி தராமல் சிறந்த கல்வி நிலையங்களை உருவாக்குதல்,சிறந்த சுற்றுலா தளங்களை பாதுகாத்தல்,உருவாக்குதல்,இன்னும் எவ்வளவோ.

ஆனால் இவை எவையும் எந்த கட்சியின் வாக்குறுதியிலும் இல்லை காரணம் மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி.ஒவ்வொரு தனி மனிதனும் அவன் பி.எஃப் அவ்வளவு,அவனுக்கு என்னென்ன வசதி என்று தான் பார்க்கிறான் நாடாவது மண்ணாவது.இவர்களுக்கு அரசியல்வாதிகள் எப்படி தீர்வு சொல்ல முடியும் மேற்கண்ட வழிகளை தரலாம் ஆனால் அவை நீண்ட கால திட்டங்கள் மக்களை உடனடியாக கவர தற்காலிக திட்டங்கள் மூலம் அரசியல் அரியணை ஏறிவிட்டால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று சொல்ல ஆயிரம் காரணங்கள் இப்படிப்பட்ட மன நிலையில் மக்களும் கட்சிகளும் இருக்கும் வரையில் 2060 என்ன 3060ல் கூட ஏழைகள் குடிசையில் தான் இருப்பார்கள்.அவன் அப்பா சத்தம் போட்டார்,

"டேய் என்னடா வானத்தை பாத்தாப்ல யோஜன? சட்டு புட்டுனு படிப்ப முடிச்சுட்டு வேலைக்கு போ இன்னும் ஆறு மாசத்துல நாலு காசு சேப்பம் குடிசைய சரி பண்ணலாம் அப்புறம் மழ காலம், நம்ம வாழ்க்கை நம்ம கையில மட்டுதான்"

குறிப்பு: வலைப்பதிவர்களுக்கான மாதாந்திரப்போட்டிக்கு இப்பதிவு அளிக்கப்பட்டுள்ளது,இதே போன்ற மற்ற நண்பர்களின் பதிவுகளைக் காண இங்கு க்ளிக்கவும்.மே 21 முதல் 25 வரை ஓட்டெடுப்பு நிகழும் (இது ச்சும்மா ஒரு இன்ஃபர்மேஷனுக்கு மட்டுந்தான் ஹி ஹி)

3 comments:

நன்மனம் said...

எல்லாத்தையும் நீங்களே சொன்னால், பின்னூட்டத்துல நாங்க என்ன சொல்லரது.

ஆதலால் ஒரு + (குத்து) மட்டும்

அருண்மொழி said...

//தமிழ் வழிக்கல்வி கட்டாயமாக்கப்படும்...பெரிதாக சிரித்தான் எதற்கு எந்த வேலைக்கும் போகாமல் இருக்கவா? இவன் கல்லூரியில் படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலை பார்க்கிறான் பீஸா டெலிவரி பாயாக.இதே ஆங்கிலம் சரளமென்றால் இன்னும் நல்ல நிலைமை தரும் கால் சென்டர்,பிபிஓ வில் சேர்ந்திருப்பான்.//

ஹிந்தி படித்தால் வானத்தையே வில்லாக வளைக்கலாம் என்று இருக்கும் போது - ஆங்கிலம் பற்றி எப்படி.

அப்படி என்றால், இணைய தள விகுதிப்படி நீங்கள் தி.மு.க!!!

Thats Secret said...

அருண்மொழி திட்டுகிறீர்களா என்று தெரியவில்லை... நான் தமிழ் வழிக்கல்விக்கு எதிரியல்லன்.வேலை வாய்ப்பு, பசி ஆகியவற்றோடு இன்றைய சென்னையில் வேலை தேடும் (எஞ்ஜினியரிங்) இளைஞர்களுக்கு கம்பெனிகள் தமிழுக்கு தரும் முக்கியத்துவம் தெரியும், அதை கூற விழைந்தேன். திமுக தமிழ்வழிக்கல்வி பிரசாரத்தை கை விட்டு (மறந்து) வெகு நாட்களாகி விட்டது.