Tuesday, January 16, 2007

வலைப்பதிவு Commercialization... எப்போது?

இப்போதைய நிலவரம் ஏதும் தெரியாது, வேறு யாரேனும் சமீபத்தில் இது பற்றியே எழுதியிருந்தாலோ, Adsense எல்லாம் rubbish என்றிருந்தாலோ நான் பொறுப்பல்ல‌.


சமீபத்தில் பொங்கலன்று வலைப்பதிவர் கூட்டம் நாமக்கல்லில் நிகழ்ந்தது. நாமக்கல் சிபியும் நானும் மட்டுமே, அவர் ரெண்டு பேர் சந்திச்சாலும் கூட்டம் தானேன்னதால அப்டி சொல வேண்டிதாப்போச்சு. ஹி ஹி...





முதல்ல நான் யாரு இங்க புதுசான்னு கேக்கறவங்களுக்கு... கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ஆறு மாசமா இங்க 'active user' ஆ இருந்தேன். எனக்கு மேற்படிப்புக்கு போக வேண்டிய நிலைமையால சில காலம் வர முடியாம போச்சு.இப்ப சிபிய மீட் பண்ணவும் திரும்பவும் எப்பிடியிருக்குன்னு எட்டிப் பார்க்க வந்தேன்.முடிந்தவரை (நீங்கள் பரவாயில்ல கஷ்டப்பட வேண்டாம்னாலும்) எழுத முயற்சிக்கிறேன்.





ஆறு மாதம் பெரிய மாற்றம் வலைப்பதிவில் நிகழ்ந்திருப்பதாய் தோன்றவில்லை... ஒருவேளை நான் இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டுமா என்றும் தோன்றுகிறது.ப்ளாக்கர் சில தொல்லைகளிலிருந்து விடுதலை தந்திருக்கிறது.புதுத் தொல்லைகள் இருக்கிறதா என்று பழகினால் தெரிந்து விடும்.நான் எதிர்பார்த்த மாற்றம் வியாபார மயமாக்கல். வலைப்பதிவில் வெளிநாடுகளில் முழுநேரத்தொலிலாகவே செய்யும்போது நாம் பாக்கெட் மணியாவது சம்பாதிக்க முடியுமா (தமிழில் வெளியிட்டால்) என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. கூகிள் இப்போது தான் சோதனை முயற்சியாக தமிழ் விளம்பரங்கள் வெளியிட ஆரம்பித்திருக்கிறது. வெற்றியடைந்தால் வேட்டை தான்...





Sorry தமிழ் Adword பார்த்தேன் ஆனால் screenshot எடுக்கவில்லை