இன்றைய தினமலரில் ( புதுச்சேரி இதழ் இரண்டாம் பக்கம்) சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு ஆதரவாக பேசிய பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்காவை கண்டித்து ஜார்கண்ட் மாநில கல்லூரி மாணவிகள் வளையல், சேலை போன்றவற்றை அனுப்பி வைக்கப் போவதாக கூறி, தன்பாத் நகரில் நேற்று போராட்டம் நடத்தியாக புகைப்படம் வெளியிட்டிருந்தார்கள்.
அதில் போஸ் கொடுக்கும் விதமாக பெண்கள் பெருமையாக சேலை, வளையல் எல்லாம் வைத்திருந்தார்கள். சிரிப்பு சிரிப்பாக வந்தது. போராடுவதன் நோக்கம் நல்ல விஷயம் தான். போராடிய விதம் தான் சகிக்கவில்லை.
வளையல், சேலை அனுப்பி வைப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? சின்கா கோழை என்றா? பெண்கள் கோழைகளா?
யார் இந்த யோசனையை கொடுத்ததோ... பாவம்... பெண் புத்தி பின் புத்தி என்கிற மூட நம்பிக்கையை நிரூபிக்காதீர்கள்.
அப்புறம் பழைய விகடனை புரட்டினேன் (March 12, 2008), ஹாய் மதனில் ஒரு கேள்வி "புத்திசாலி கூட தோற்கும் இடம் எது?" அதற்கு மதனின் பதில், "பெண்ணிடம் மட்டுமே". ஹாய் மதன் எனக்கு பிடித்தமான பகுதி. இக்கேள்வி ஒரு பாலினத்தை மட்டுமே குறிக்கவேயில்லை. ஆனால் ஏன் பதிலில் ஆண்கள் மட்டுமே புத்திசாலி என்கிற பாவம் வந்ததென்று தெரியவில்லை.
பி.கு: நான் இல்லை. இயல்பாக தோன்றிய கேள்விகள் இவை.
Wednesday, March 12, 2008
Tuesday, January 16, 2007
வலைப்பதிவு Commercialization... எப்போது?
இப்போதைய நிலவரம் ஏதும் தெரியாது, வேறு யாரேனும் சமீபத்தில் இது பற்றியே எழுதியிருந்தாலோ, Adsense எல்லாம் rubbish என்றிருந்தாலோ நான் பொறுப்பல்ல.
சமீபத்தில் பொங்கலன்று வலைப்பதிவர் கூட்டம் நாமக்கல்லில் நிகழ்ந்தது. நாமக்கல் சிபியும் நானும் மட்டுமே, அவர் ரெண்டு பேர் சந்திச்சாலும் கூட்டம் தானேன்னதால அப்டி சொல வேண்டிதாப்போச்சு. ஹி ஹி...
முதல்ல நான் யாரு இங்க புதுசான்னு கேக்கறவங்களுக்கு... கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ஆறு மாசமா இங்க 'active user' ஆ இருந்தேன். எனக்கு மேற்படிப்புக்கு போக வேண்டிய நிலைமையால சில காலம் வர முடியாம போச்சு.இப்ப சிபிய மீட் பண்ணவும் திரும்பவும் எப்பிடியிருக்குன்னு எட்டிப் பார்க்க வந்தேன்.முடிந்தவரை (நீங்கள் பரவாயில்ல கஷ்டப்பட வேண்டாம்னாலும்) எழுத முயற்சிக்கிறேன்.
ஆறு மாதம் பெரிய மாற்றம் வலைப்பதிவில் நிகழ்ந்திருப்பதாய்
தோன்றவில்லை... ஒருவேளை நான் இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டுமா என்றும் தோன்றுகிறது.ப்ளாக்கர் சில தொல்லைகளிலிருந்து விடுதலை தந்திருக்கிறது.புதுத் தொல்லைகள் இருக்கிறதா என்று பழகினால் தெரிந்து விடும்.நான் எதிர்பார்த்த மாற்றம் வியாபார மயமாக்கல். வலைப்பதிவில் வெளிநாடுகளில் முழுநேரத்தொலிலாகவே செய்யும்போது நாம் பாக்கெட் மணியாவது சம்பாதிக்க முடியுமா (தமிழில் வெளியிட்டால்) என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. கூகிள் இப்போது தான் சோதனை முயற்சியாக தமிழ் விளம்பரங்கள் வெளியிட ஆரம்பித்திருக்கிறது. வெற்றியடைந்தால் வேட்டை தான்...
Sorry தமிழ் Adword பார்த்தேன் ஆனால் screenshot எடுக்கவில்லை
சமீபத்தில் பொங்கலன்று வலைப்பதிவர் கூட்டம் நாமக்கல்லில் நிகழ்ந்தது. நாமக்கல் சிபியும் நானும் மட்டுமே, அவர் ரெண்டு பேர் சந்திச்சாலும் கூட்டம் தானேன்னதால அப்டி சொல வேண்டிதாப்போச்சு. ஹி ஹி...
முதல்ல நான் யாரு இங்க புதுசான்னு கேக்கறவங்களுக்கு... கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ஆறு மாசமா இங்க 'active user' ஆ இருந்தேன். எனக்கு மேற்படிப்புக்கு போக வேண்டிய நிலைமையால சில காலம் வர முடியாம போச்சு.இப்ப சிபிய மீட் பண்ணவும் திரும்பவும் எப்பிடியிருக்குன்னு எட்டிப் பார்க்க வந்தேன்.முடிந்தவரை (நீங்கள் பரவாயில்ல கஷ்டப்பட வேண்டாம்னாலும்) எழுத முயற்சிக்கிறேன்.
ஆறு மாதம் பெரிய மாற்றம் வலைப்பதிவில் நிகழ்ந்திருப்பதாய்
தோன்றவில்லை... ஒருவேளை நான் இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டுமா என்றும் தோன்றுகிறது.ப்ளாக்கர் சில தொல்லைகளிலிருந்து விடுதலை தந்திருக்கிறது.புதுத் தொல்லைகள் இருக்கிறதா என்று பழகினால் தெரிந்து விடும்.நான் எதிர்பார்த்த மாற்றம் வியாபார மயமாக்கல். வலைப்பதிவில் வெளிநாடுகளில் முழுநேரத்தொலிலாகவே செய்யும்போது நாம் பாக்கெட் மணியாவது சம்பாதிக்க முடியுமா (தமிழில் வெளியிட்டால்) என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. கூகிள் இப்போது தான் சோதனை முயற்சியாக தமிழ் விளம்பரங்கள் வெளியிட ஆரம்பித்திருக்கிறது. வெற்றியடைந்தால் வேட்டை தான்...Sorry தமிழ் Adword பார்த்தேன் ஆனால் screenshot எடுக்கவில்லை
Friday, July 28, 2006
அனைவருக்கும் வணக்கம்
கோகுல் என்கிற (சில நாட்கள் காணாமல் போயிருந்த) தொல்லை திரும்பவும் வந்து விட்டது.தமிழ்மணத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விட்டது போல... வாழ்த்துக்கள்
நட்சத்திர வாரத்தில் எழுத முடியாது போய் விட்டது அதை விட முக்கியம் அதை சொல்லாமல் கூட விட்ட என்னுடைய அநாகரிகம்.நிர்வாகிகள் மன்னிக்கவும்.
இருப்பினும் என்னை மன்னித்து விட்டார்கள் நன்றிகள் பல. நிர்வாகவியல் (MBA) படிப்பில் சில பல எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் இருப்பினும் ஓரளவு செட்டிலாகி விட்டேன்.நாமக்கல் சிபியிடம் மட்டும் எழுத முடியாமைக்கு புலம்பினேன்...எதிர் முனை தொலைபேசியில் (ரொம்ப சந்தோஷத்துடன்...?!) படிப்பு தான் முக்கியம் என குறுந்தகவல்(SMS) அனுப்பினார்.
தினமும் கணிணி முன் உட்கார நேரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது, எனினும் பழைய நிலைக்கு திரும்ப ஒரு மாதமேனும் ஆகலாம் எனவே பூக்காடு மட்டுமே இயக்கத்தில் இருக்கும்.
நாளை முதல் மீண்டும் சந்திப்போம்...980980
Categories: local

Subscribe to:
Posts (Atom)