காதல் காட்சிகளுக்கு French Kiss, கதைக்கு Blood Diamond அப்புறம் கொஞ்சம் Bourne Ultimatum, சில பல தெலுங்கு தமிழ் படங்கள் சேர்த்தால் குருவி மசாலா. இயக்குனர் ஷங்கருக்கு அடுத்து பேரை கெடுத்துக் கொண்டிருக்கிறார் தரணி. தைரியமாக முதல் நாளே போயிருப்பேன், “இனி அடுத்த விஜய் யாரென்று தான் போட்டியிருக்கும்” என்கிற இயக்குனர் பேட்டி விகடனில் படித்தது ஞாபகம் இருந்தது. அதான் தள்ளிப் போட்டேன்.
விவேக் மட்டும் கொஞ்சம் ஆறுதல். ஆனாலும் இரட்டை அர்த்த வசனங்கள். த்ரிஷா எப்படியாவது பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் போதும் விட்ட market ஐ பிடித்து விடலாம் என்கிற Strategy ஐ மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லை அப்படி யோசனை தருபவரை மாற்றிக் கொள்ள வேண்டும். விஜய் நடிப்பில் மிதப்பு தூக்கல். முதல் காட்சியிலிருந்து கடைசி வரை. நடனம் அருமை, ஆனால் பாடல்கள் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்.
வில்லன்ஸ் கஷ்டம்... இதுக்கு மேலே எழுதவும் ஒண்ணுமில்ல. ஆந்திரா ஊறுகாய் தொட்டுக்க தான், முழு சாப்பாடாக சாப்பிட சொல்கிறார்கள், 50 ரூபாய்க்கு. முடியலீங்ணா.
பி.கு: இந்த படத்திற்கு 30 மார்க்கை தாண்டி மதிப்பிடும் பத்திரிக்கைகளை படிப்பது உங்கள் உடல், மன நலத்திற்கு தீங்கானது.